ஃபேஸ்புக்கில் போட்டோ போட்டு ஒவ்வொரு லைக்குக்கும் ஒவ்வொரு குத்துவிட்ட கொடூர கணவன்!

 
Published : Nov 30, 2017, 11:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
ஃபேஸ்புக்கில் போட்டோ போட்டு ஒவ்வொரு லைக்குக்கும் ஒவ்வொரு குத்துவிட்ட கொடூர கணவன்!

சுருக்கம்

A wife who is tortured - husband arrest

ஒவ்வொரு லைக்குக்கும் ஒவ்வொரு குத்து என மனைவியை சித்தரவதை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைத்தளமான பேஸ்புக் பக்கம், அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தங்கள் கருத்துக்களை வெளியிடவும், பேஸ்புக் பக்கத்தை ஒரு தளமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல், பேஸ்புக் பக்கத்தில், பெண்கள் தங்களின் புகைப்படங்களை வெளியிடுவது வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தங்கள் புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டும், கருத்துக்களைக் கூறியும் லைக்குகள் பெற்று வருகின்றனர்.

பேஸ்புக் பக்கத்தில் ஒவ்வொரு லைக் பெறும்போதும், மனைவியை தாக்கும் சம்பவம் உருகுவே நாட்டில் நடந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு லைக்குக்கும் மனைவியின் முகத்தில் ஒவ்வொரு குத்து குத்தி சித்திரவதை செய்து வந்துள்ளார் கணவர்.

உருகுவே நாட்டின் சன்சின் மாகாணம், நெம்பி பகுதியைச் சேர்ந்தவர் அடோல்பினோ. இவரது கணவர் கேலியானோ. தனது மனைவி அடோல்பினோ மீது சந்தேகம் கொண்டு, அவரைத் தாக்குவதும், வீட்டில் அடைத்து வைத்து சித்தரவரை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மனைவி அடோல்பினோவின் பேஸ்புக் பக்கத்தினை முழுவதுமாக கேலியானோ பொறுப்பில் எடுத்துக் கொண்டார். பின்னர், மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு, அதற்கு வரும் லைக், கமெண்ட், ரியாக்சன் என அனைத்துக்கும் ஒவ்வொரு குத்துவிட்டு சித்தரவதி செய்து வந்துள்ளார்.

சித்தரவதைக்கு ஆளான அடோல்பினோவின் நிலையைப் பார்த்த, கேலியானோவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் கேலியானோவை கைது செய்தனர்.

கேலியானோவின் தாக்குதலுக்கு ஆளான அடோல்பினோவின் வாய் உடைந்து விட்டதாகவும், அடையாளம் தெரியாதபடி முகம் வீக்கம் கொண்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு முக ஒழுங்கமைப்பு சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது. 

மனைவியை சித்தரவதை செய்த கேலியானோ கைது செய்யப்பட்டார். அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

எப்ஸ்டீன் வழக்கில் புதிய திருப்பம்.. காணாமல் போன டிரம்ப் புகைப்படம்.. வெளியான முக்கிய ஆதாரம்
மீண்டும் வெடித்த வன்முறை.. பெண்கள் மீது தொடர் தாக்குதல்.. வங்கதேசத்தில் பரபரப்பு