மிஸ் யுனிவர்ஸ் மகுடம் சூடினார் தென்னாப்பிரிக்க அழகி டெமிலேக் நெல்பீட்டர்ஸ்

 
Published : Nov 27, 2017, 11:51 AM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
மிஸ் யுனிவர்ஸ் மகுடம் சூடினார் தென்னாப்பிரிக்க அழகி டெமிலேக் நெல்பீட்டர்ஸ்

சுருக்கம்

Miss South Africa Demi Leigh Nel Peters Crowned Miss Universe 2017

தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவரான டெமிலேக் நெல் பீட்டர்ஸ், 2017 ஆம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்று  மகுடம் சூடினார். 

இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மானுஷி சில்லார், அண்மையில் 2017ம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை வென்றார். 

இதை அடுத்து, பிரபஞ்ச அழகிக்கான  66 வது மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டி  அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்றது.  92 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில், இந்தியாவைச் சேர்ந்த மிஸ் திவா சாந்தா சசிதரும் கலந்து கொண்டார். ஆனால்,  இறுதிப் போட்டிக்குத் தேர்வான 15 பேர் பட்டியலில் இவர் இடம்பெறவில்லை.

இதை அடுத்து, இந்தப் போட்டியில் இறுதிக் கட்ட தேர்வு நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா, ஜமைக்கா, வெனிசுலா, தாய்லாந்து, கொலம்பியா நாடுகளின் அழகிகள் முதல் 5 இடத்தில் இருந்தனர்.

பிரபஞ்ச அழகிக்கான இந்த இறுதிக் கட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்க அழகி டெமி வென்றதாக அறிவிக்கப் பட்டார். அவருக்கு பிரான்ஸ் நாட்டின் ஐரிஸ் மிடேனெரெரால் மகுடம் சூட்டினார்.

ஜமைக்கா நாட்டு அழகி டேவினா பென்னட் இரண்டாவது ரன்னர், கொலம்பியா நாட்டின் அழகி  லாரா கோன்சலஸ் முதல் ரன்னர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

PREV
click me!

Recommended Stories

எப்ஸ்டீன் வழக்கில் புதிய திருப்பம்.. காணாமல் போன டிரம்ப் புகைப்படம்.. வெளியான முக்கிய ஆதாரம்
மீண்டும் வெடித்த வன்முறை.. பெண்கள் மீது தொடர் தாக்குதல்.. வங்கதேசத்தில் பரபரப்பு