அமெரிக்க துணை அதிபரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் கடந்த 18ம் தேதி வாஷிங்டனில் இருந்து கலிபோர்னியா சென்றார். நேற்று காலை மீண்டும் வாஷிங்டன் திரும்பியவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு லேசானஅறிகுறி இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், அவருக்கு கொரோனா ஏ சிம்டமெடிக் எனப்படும் அறிகுறியில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
3 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
கமலா ஹாரிஸ்க்கு கொரோனா
உலகளவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிய வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக உலக அளவில் குறைந்து இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அறிகுறி இல்லை
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் கடந்த 18ம் தேதி வாஷிங்டனில் இருந்து கலிபோர்னியா சென்றார். நேற்று காலை மீண்டும் வாஷிங்டன் திரும்பியவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு லேசானஅறிகுறி இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், அவருக்கு கொரோனா ஏ சிம்டமெடிக் எனப்படும் அறிகுறியில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
3 டோஸ் தடுப்பூசி
கமலா ஹாரிசுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாததை அடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். வீட்டில் இருந்தவாறு அலுவல்களை கவனிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.