பாகிஸ்தான் கராச்சி பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த குண்டி வெடிப்பில், இரண்டு பெண்கள் உட்பட 3 சீனர்கள் என மொத்தம் 4 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு தீவிரவாத இயக்கமான பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் மஜீத் படைப்பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தான் கராச்சி பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த குண்டி வெடிப்பில், இரண்டு பெண்கள் உட்பட 3 சீனர்கள் என மொத்தம் 4 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு தீவிரவாத இயக்கமான பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் மஜீத் படைப்பிரிவு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் கராச்சி பல்கலைக்கழக வளாகத்திற்குள் வேன் நுழையும் போது, அங்கு நூழைவு வாயில் நின்றுக்கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென தற்கொலை படையாக மாறி குண்டை வெடிக்கும் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| CCTV footage of the moment of the car explosion at Karachi University shows a suicide bomber self-detonating & killing at least 2 Chinese nationals. Tune in to watch here - https://t.co/PVPLs8g0u5 pic.twitter.com/CYY3s585Vh
— Republic (@republic)பாகிஸ்தான் மக்களுக்கு சீன மொழியை கற்பிக்கும் வகையில் சீனாவால் கட்டப்பட்ட கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் வாயில் அருகே வேனில் வெடிப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 3 சீனர்கள் உட்பட நான்கு பேர் உயிரிந்துள்ளனர்.மேலும் 3 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, வெடிக்குண்டு நிபுணர்கள், சோதனை மேற்க்கொண்டனர். மேலும் மீட்புப்படையினர் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் குண்டு வெடிப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இதுக்குறித்து விசாரணை நடத்த முழு உதவி அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வருக்கு உறுதியளித்துள்ளார்.
இதனிடையே இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு தீவிரவாத இயக்கமான பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் மஜீத் படைப்பிரிவு (BLA) பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்த தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. ஷாரி பலோச் என்ற பெண் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதாக அந்த தீவிரவாத குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தவர்களில் மூவர் சீனாவை சேர்ந்தவர்கள்.கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் இயக்குநர் ஹுவாங் குயிபிங், சீன மொழி ஆசிரியர்கள் டிங் முபெங், சென் சா மற்றும் பாகிஸ்தான் டிரைவர் காலித் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் மிகப் பெரிய நகரமான மற்றும் பொருளாதார மையமா திகழும் கராச்சியில் சீன நாட்டை சேர்ந்தவர்கள் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இலக்காவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், இரண்டு சீன நாட்டினரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த மர்மநபர் துப்பாக்கிச் சூடு நடத்தியல்,ஒருவர் படுகாயமடைந்தார்.
அதே போன்று அந்த மாதத்தில், வடமேற்கு பாகிஸ்தானின் மலைப் பகுதியில் கட்டுப்பட்டு வரும் அணைக்கு கட்டுமானத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது நட்த்தப்பட்ட தாக்குதலில் கிட்டத்தட்ட 12 சீனப் பொறியியலாளர்கள் கொல்லப்பட்டனர்.நவம்பர் 2018 இல், பலூச் பிரிவினைவாத தீவிரவாதிகள், கராச்சியில் உள்ள சீனத் தூதரகத்தைத் தாக்கினர். ஆனால் இதில் பாதுகாப்பு படையினரால் தாக்குதலில் ஈடுப்பட்ட மூவர் சம்பவ இடத்திலே கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் கராச்சி பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட அந்த வேன் நுழையும் போது, பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பெண் குண்டை வெடிக்கும் செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| CCTV footage of the moment of the car explosion at Karachi University shows a suicide bomber self-detonating & killing at least 2 Chinese nationals. Tune in to watch here - https://t.co/PVPLs8g0u5 pic.twitter.com/CYY3s585Vh
— Republic (@republic)