Blast in karachi university: கராச்சி பல்கலையில் குண்டு வெடிப்பு.. 2 சீனர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு..

By Ezhilarasan Babu  |  First Published Apr 26, 2022, 4:06 PM IST

கராச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர் இதனால் அங்கு பரபரப்பு, பதற்றம் அதிகரித்துள்ளது. கராச்சி பல்கலைக்கழக வளாகத்திற்குள் கார் வெடித்ததில் இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்


கராச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர் இதனால் அங்கு பரபரப்பு, பதற்றம் அதிகரித்துள்ளது. கராச்சி பல்கலைக்கழக வளாகத்திற்குள் கார் வெடித்ததில் இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஜியோ நியூஸ் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த சம்பவம் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே நடந்துள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, கராச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே ஒரு வேனில் குண்டுவெடிப்பு நடந்தது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் அந்த இடத்தை அடைந்துள்ளனர். அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

அந்த வேனில் ஏழு முதல் எட்டு பேர் இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. எரிவாயு சிலிண்டரால் வெடிப்பு ஏற்பட்டதாக முதலில் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் அது குண்டுவெடிப்பாகக் கூட இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து எந்த தகவலையும் போலீசார் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

பாதிக்கப்பட்டவர்கள் கராச்சி பல்கலைக்கழகத்தில் சீன மொழி கற்பிக்கும் மையமான கன்பூசியஸ் துறையில் இருந்து திரும்பி வருவதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டு வெளிநாட்டினர் தங்கள் விடுதியில் இருந்து பல்கலை கழகம் நோக்கி சென்று கொண்டிருந்ததாக ஜியோ செய்தியிடம் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என கிழக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஐஜி) முகதாஸ் ஹைதர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இதற்கிடையில், குண்டுவெடிப்பு பயங்கரவாத செயலா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குல்ஷன் போலீஸ் சூப்பிரண்டு (SP) கூறியுள்ளார். இந்நிலையில் வெடிகுண்டு செயலிழப்பு படையை அங்கு வர வழைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
 

click me!