பாகிஸ்தான் கராச்சி பல்கலைகழகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஏராளமானோர் இதில் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானிலுள்ள கராச்சி பல்கலைக்கழகத்திற்குள் குண்டு வெடிப்பு விபத்தில் இரண்டு சீன மொழி ஆசிரியர்கள் உட்பட குறைந்தது நான்கு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் மீட்பு படையினர் குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெடிப்பு ஏற்பட்ட போது வெளிநாட்டு ஆசிரியர்கள், பல்கலைகழக வேனில் ஏறி, நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ரேஞ்சர்ஸ் பணியாளர்கள் வேனை அழைத்துச் சென்றனர். இந்த குண்டு வெடிப்பின் தன்மை இன்னும் அறியப்படவில்லை.
இந்நிலையில் வெடிக்குண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.வெடி விபத்து குறித்து மிக விரைவில் தெரிவிக்கப்படும் என்று கிழக்கு டிஐஜி முகதாஸ் ஹைதர், கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரி கூறினார்.