அமெரிக்காவின் யூ-2 உளவு விமானம் சீனாவுக்குள் நுழைந்து, பலமணிநேரம் வட்டமடித்ததுடன் அது சீன இராணுவ நடவடிக்கைகளை உளவு பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இரண்டு உளவு விமானங்கள் சீன எல்லைக்குள் நுழைந்ததாகவும் சீனாவின் ராணுவ நடவடிக்கைகளை அது கண்காணித்ததாகவும் சீனா குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இதில் எந்த விதிமீறல்களிலும் தாங்கள் ஈடுபடவில்லை என அமெரிக்கா விமானப்படை விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்கனவே பல்வேறு விஷயங்களில் மோதல் நீடித்து வரும் நிலையில், சீன வான்பரப்பில் நுழைந்து அந்நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை உளவு பார்த்திருப்பதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. தென்சீனக்கடல் விவகாரம், தைவானில் சீனாவின் தலையீடு, ஹாங்காங்கில் சீனாவின் ஆதிக்கம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பகை நீடித்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே அப்பகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் மாறிமாறி வார்த்தை போரில் ஈடுபட்டு வரும் நிலையில், தூதரக உறவுகளை துண்டித்துக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன.
undefined
எப்போது வேண்டுமானாலும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடிக்கலாம் என்ற சூழல் எழுந்துள்ளது. இந்நிலையில் சீனா,அமெரிக்கா மீது புதியதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அமெரிக்காவின் யூ-2 உளவு விமானம் சீனாவுக்குள் நுழைந்து, பலமணிநேரம் வட்டமடித்ததுடன் அது சீன இராணுவ நடவடிக்கைகளை உளவு பார்த்ததாகவும் கூறப்படுகிறது. சீனாவின் ரேடார்கள் மற்றும் ராணுவ கண்காணிப்புகளை மீறி அமெரிக்க உளவு விமானங்கள் சீன எல்லைக்குள் நுழைந்ததாகவும், அதிக உயரத்தில் இருந்து ராணுவ பயிற்ச்சிகளையும், படைகளின் நகர்வுகளையும் கண்காணித்ததாகவும் சீனா தெரிவித்துள்ளது. கடந்த 1950 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இச்சம்பவம் நடந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இதனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் தீவிரமடைந்துள்ளது, ஏனெனில் கடந்த மாதம் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள், ஷாங்காயில் இருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் வட்டமடித்து சீனாவை அச்சுறுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் வடக்கு சீனாவில் நடந்ததாகவும், ஆனாலும் சரியான இடம் தெரியவில்லை எனவும், ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. இந்நிலையில் அமெரிக்கா மீது சீனா முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுக்கவில்லை, அதே நேரத்தில் தாங்கள் எந்த விதிகளையும் மீறவில்லை எனவும் அமெரிக்கா கூறியுள்ளது. இந்நிலையில் சீன பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வு-கின் கூறுகையில், அமெரிக்க கடற்படையின் இரண்டு யு-2 விமானங்கள் வடக்கு பகுதியில் எங்கள் ராணுவ பயிற்சிகளை பல மணி நேரம் உளவு பார்த்தன.
அது எங்கள் பயிற்சியை பாதிப்பதாக இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறி உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஆபத்தானது, அது சீன எல்லைக்குள் நுழைந்தால், ராணுவ மோதல்கள் ஏற்படக்கூடும். நாளடைவில் அது அதிகரிக்கக்கூடும், சீன ராணுவம் அங்கு ஒரிடத்தில் மட்டுமல்ல இரண்டு இடங்களில் பயிற்சி மேற்கொள்கிறது.
என் கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க விமானப்படை, நாங்கள் எங்கள் எல்லைக்குள் பணியாற்றியுள்ளோம், எந்த விதிகளையும் மீறவில்லை, இதற்கு முன்னர் நாங்கள் இந்திய பெருங்கடலில் ரோந்து பணிகளைமேற்கொண்டோம். அதை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம், அமெரிக்க ராணுவ விமானங்கள் சீன எல்லைக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர்கள் மிகவும் தொழில்நுட்பம் வாய்ந்தவர்களாக உள்ளனர். தெரிவித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் யூ-2 உளவு விமானம், சுமார் 70,000 அடி உயரத்திலிருந்து, தரையில் நடக்கும் நிகழ்வுகளை மிகத்துல்லியமாக கண்காணிக்க கூடியது என கூறப்படுகிறது. HD தொழில்நுட்ப வீடியோக்களை உருவாக்க கூடிய ஆற்றல் கொண்டது எனவும் விமான எதிர்ப்பு ஏவுகணையால் கூட அதை நெருங்க முடியாது எனவும் கூறப்படுகிறது.