அமெரிக்க பொது சேவைகள் நிர்வாகம் ஆண்டுதோறும் லைட்ஹவுஸ் என்று அழைக்கப்படும் கலங்கரை விளக்கங்களை விற்பனை செய்கிறது. இலவசமாகவும் வழங்குகிறது.
அமெரிக்கா நாடு முழுவதும் உள்ள கலங்கரை விளக்கங்களைக் பாதுகாக்கும் முயற்சியில் அவற்றை விற்பனை செய்து வருகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நிகழ்வு லைட்ஹவுஸ் சீசன் என்று அழைக்கிறது. இந்த ஆண்டு 10 கலங்கரை விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் ஆறு கலங்கரை விளக்கங்கள் கூட்டாட்சி நிறுவனங்கள், மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், கல்வி முகமைகள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்புகளுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும் என்று அமெரிக்க பொது சேவைகள் நிர்வாகம் (GSA) தெரிவித்துள்ளது.
துருக்கி அதிபராக 3வது முறை பதவியேற்கும் தையிப் எர்டோகன்; புதிய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?
நான்கு கலங்கரை விளக்கங்கள் ஆன்லைனில் பொது ஏலத்தில் விடப்படும். யார் வேண்டுமானாலும் தங்களுக்கு பிடித்த கலங்கரை விளக்கத்தை வாங்கிக்கொள்ளலாம். இலவசமாக கொடுக்கப்படும் ஆறு கலங்கரை விளக்கங்களை யாரும் வாங்க முன்வராவிட்டால் அவையும் ஏலத்துக்கு வரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
கலங்கரை விளக்க தொழில்நுட்பம் காலாவதியாகிவிட்டாலும், வரலாற்று முக்கியத்துவம் கருதி அவற்றைப் பாதுகாப்பதற்காக இவ்வாறு விற்பனை செய்யப்படுகின்றன. ஜி.பி.எஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக, கலங்கரை விளக்கங்கள் கடல் போக்குவரத்துக்கு இன்றியமையாத தேவை அல்ல என்று நிலை வந்துவிட்டது. பல லைட்ஹவுஸ்கள் இடிக்கப்பட்டுவிட்டன. அல்லது கைவிடப்பட்டுள்ளன.
உலக வங்கி தலைவராக பொறுப்பேற்றார் அஜய் பங்கா; இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்
"கடல் பாதுகாப்பில் கலங்கரை விளக்கங்களின் பங்கை மக்கள் மிகவும் பாராட்டுகிறார்கள். ஆபத்தான துறைமுகங்களில் சிலவற்றிற்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதற்கு அவை பயன்பட்டுள்ளன. வணிகத்திற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கியுள்ளன" என்று அமெரிக்க பொது சேவைகள் நிர்வாகம் அதிகாரி ஜான் கெல்லி சொல்கிறார்.
கடந்த காலத்தில் இந்த லைட்ஹவுஸ் சீசனில் வாங்கப்பட்ட சில கலங்கரை விளக்கங்கள் தனித்துவமான தங்குமிடங்களாக, தனியார் குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. 2000ஆம் ஆண்டில் தேசிய வரலாற்று கலங்கரை விளக்கப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து, அமெரிக்க பொது சேவைகள் நிர்வாகம் கலங்கரை விளக்கங்களை விற்பனை செய்துவருகிறது.
இதுவரை, 150 கலங்கரை விளக்கங்கள் விற்கப்பட்டுள்ளன. 80 கலங்கரை விளக்கங்கள் வெவ்வேறு அமைப்புகளுக்கு விலை இல்லாமல் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் 70 கலங்கரை விளக்கங்கள் ஏலம் விடப்பட்டு, 10 மில்லியன் டாலருக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது.