டொனால்டு டிரம்ப் மீது தாக்குதல் முயற்சி – தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு

Asianet News Tamil  
Published : Nov 07, 2016, 12:48 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
டொனால்டு டிரம்ப் மீது தாக்குதல் முயற்சி – தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு

சுருக்கம்

மேடையில் பேசி கொண்டிருந்த டொனால்டு டிரம்ப் மீது தாக்குதல் நடத்த மர்மநபர் பாய்ந்தார். அவரிடம் இருந்து பாதுகாவலர்கள் மீட்டனர்.

ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமெரிக்காவில் நாளை நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில், இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தல் நாளை நடக்க உள்ளதால், அங்கு நடைபெறும் கருத்து கணிப்பில் வெற்றி பெறுவது யார் என்பதில் முக்கிய வேட்பாளர்களான ஹிலாரியும், டொனால்டு டிரம்பும் மிக குறைந்த அளவு வித்தி யாசத்தில் உள்ளனர். அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என அறி வதில் உலகமே ஆவலாக உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், நெவடா நகரில் நடந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்து, திடீரென ஒரு மர்மநபர், டிரம்ப் மீது தாக்குதல் நடத்த ஓடிவந்தார்.

இதை பார்த்ததும், சுதாரித்து கொண்ட அவரது பாதுகாவலர்கள், அந்த மர்மநபரை மட்க்கி பிடித்தனர். இதற்கிடையில், டிரம்பை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து சென்றனர். அந்த மர்மநபரை அங்கிருந்து அப்புறப்படுத்திய பிறகு, சிறிது நேரம் கழித்து மீண்டும் உரையாற்றினார். அப்போது தன்னை தாக்க வந்த மர்மநபரிடம் இருந்து காப்பாற்றிய பாதுகாவலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சிரியா மசூதியில் பயங்கரம்! தொழுகையின் போது நடந்த கொடூர தாக்குதல்.. 8 பேர் உடல் சிதறி பலி!
கொடூரம்.. தொழுகையில் ஈடுபட்ட பாலஸ்தீனியர் மீது வாகனத்தை ஏற்றிய இஸ்ரேலிய வீரர்!