பேருந்தில் பயணம் செய்வாேருக்கு தங்கம், ஐ-போன் பரிசு...!!! - துபாய் அரசு

Asianet News Tamil  
Published : Nov 06, 2016, 07:44 AM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
பேருந்தில் பயணம் செய்வாேருக்கு தங்கம், ஐ-போன் பரிசு...!!! - துபாய் அரசு

சுருக்கம்

துபாய் நாட்டில் மெட்ரோ ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் பொதுமக்கள் பயணம் செய்தால் தங்கம் மற்றும் ஐ-போன்கள் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

மனித இனம் மட்டுமன்றி உயிரினங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலை சார்ந்தே உயிர் வாழ்கின்றன. உயிரினங்கள் அனைத்திற்கும் இயற்கை தான் கடவுள். சுற்றுச்சூழல் பாதித்தால் மனித இனம் கூண்டோடு அழிவது நிச்சயம். இயற்கை தந்த செல்வம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.

தொழிற்சாலை கழிவுகள், ரசாயன திரவம் மற்றும் கதிரியக்க கசிவுகள், வாகனங்களின் இறைச்சல், வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை, சிகரெட், பாலித்தீன் பயன்பாடுகள், மலைகளையும், காடுகளையும் அழித்து மரம் வெட்டுதல், மனித கழிவுகளை நேராக பருகும் நீர்நிலைகளில் விடுதல், இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடுகள் உள்ளிட்டவைகளால் சுற்றுச் சுழல் பாதிப்படைகிறது.

வாகனங்கள் வெளியிடும் புகை, சுவாசக்காற்றை மாசுபடுத்துவது மட்டுமன்றி வாயுமண்டலத்தையும் பாதிப்படையச் செய்கிறது. இதனால் சூரியக் கதிர்கள் பூமியை பெருமளவில் வெப்பப்படுத்துவது மட்டுமல்லாமல், துருவமண்டலத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதாேடு, கடல் நீர் மட்டமும் உயர்ந்து வருவதால், மனிதனின் அழிவுக்காலம் நெருங்கி வருகிறது. 

இந்நிலையில், புவி மண்டலத்தை பாதுகாக்க துபாய் அரசு பல்வேறு நடவடிக்கைககளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் புகையால் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிப்பிற்குள்ளாகியிருப்பதால், மெட்ரோ ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள பொதுமக்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. அதன்படி, அந்நாட்டில், மெட்ரோ ரயில் மற்றும் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு தங்கம், ஐபோன் போன்ற பரிசுகளையும் அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

சிரியா மசூதியில் பயங்கரம்! தொழுகையின் போது நடந்த கொடூர தாக்குதல்.. 8 பேர் உடல் சிதறி பலி!
கொடூரம்.. தொழுகையில் ஈடுபட்ட பாலஸ்தீனியர் மீது வாகனத்தை ஏற்றிய இஸ்ரேலிய வீரர்!