அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் ? - குரங்கு, சுறா மீன், நாய், பன்றி ஜோதிடத்தில் கணிப்பு

Asianet News Tamil  
Published : Nov 06, 2016, 03:15 AM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் ? - குரங்கு, சுறா மீன், நாய், பன்றி ஜோதிடத்தில் கணிப்பு

சுருக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அடுத்த அதிபர் யாரென்று அறிந்துகொள்ள உலகமே ஆவலுடன் உள்ளநிலையில், சீனாவில் உள்ள குரங்கு ஜோதிடம், அமெரிக்சுகாவின்றா  மீன், நாய்ஜோ, பன்டறி ஜோதிடக் கணிப்பில் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யாரென்று கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாக ஆளும் ஜனநாயகக் கட்சி  சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. 

இந்நிலையில், சீனாவில் குரங்கை வைத்து ஜோதிடம் பார்த்து அடுத்த அதிபர் கணிக்கப்பட்டுள்ளது. சீனா வில் உள்ள சாங்சா மாநிலம், ஷியான் ஏரி உயிரியல் பூங்கா உள்ளது இங்குள்ள  ஜெதா எனும் குரங்கு தான் ஜோதிடம் பார்த்து கூறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெல்வார்கள் என்பது குறித்து கடந்தவாரம், இந்த குரங்கிடம் ஜோதிடம் பார்க்கப்பட்டது. 

அதாவது, ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் ஆள் உயர கட்அவுட் வைக்கப்பட்டு, அதன் அருகே ஒரு டஜன் வாழைப்பழங்கள் வைக்கப்பட்டு இருந்தன.  அடுத்த அதிபர் யாரென்று, இந்த குரங்கிடம் ஜோதிடம் கேட்கப்பட்டது. அப்போது ஜெதா குரங்கு, டொனால்ட் டிரம்பின் உருவ கட்அவுட்டை கட்டிப்பிடித்து, முத்தமிட்டு அடுத்த அதிபரைத் தேர்வு செய்தது. 

ஐரோப்பிய கால்பந்து, உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் யார் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று குரங்கு ஜோதிடம் துல்லியமாகத் கணித்துக் கூறிய நிலையில், இந்த முறை அதிபர் குறித்த கணிப்புகள் துல்லியமாகும் என அந்நாட்டு மக்கள் நம்புகின்றனர். 

சீனாவில் இந்த ஜெதா குரங்கை கணிப்பாளர்களின் அரசன்எ ன்று செல்லமாக அழைக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அதுமட்டுமல்ல அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், நோவா சவுத்ஈஸ்டன் பல்கலையில்  இரு சுறாமான்களை வைத்து ஜோதிடம் பார்க்கப்பட்டது. அதாவது, இரு சுறாமீன்களுக்கும், டிரம்ப் சுறா, ஹிலாரி சுறா எனப் பெயரிடப்பட்டு நீந்தும் பந்தயம் வைக்கப்பட்டது. இதில் ஹிலாரி சுறாமீன், 510மைல்கள் தொலை மட்டுமே நீந்தியது, ஆனால், டிரம்ப் சுறா மீன் 652 மைல்கள் நீந்தியது. இதனால், இந்த தேர்தலில் டிரம்ப் வாகை சூடுவார்  என அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

அதேபோல, கிளீவ்லாந்து.காம் எனும் இணையதளம் நடத்திய நாய்களுக்கான  போட்டியில் டிரம்ப் பெயர் கொண்ட நாய்தான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதுள்ளது. இதனால், டிரம்புக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

மேலும், இரு ஆமைகளை வைத்து நடத்தப்பட்ட போட்டியில், ஹிலாரி ஆமை வென்றது. பன்றிகளை வைத்து நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயக் கணிப்பில்,  டிரம்ப் பெயர் கொண்டபன்றிக்குட்டி, வேகமாக ஓடி வென்றதால், டிரம்ப் வெல்வார் எனக் அமெரிக்கர்கள் நம்புகின்றனர்.

எப்படியெல்லாம் ஜோதிடம் பார்க்குறாங்க.. பாருங்க....

PREV
click me!

Recommended Stories

சிரியா மசூதியில் பயங்கரம்! தொழுகையின் போது நடந்த கொடூர தாக்குதல்.. 8 பேர் உடல் சிதறி பலி!
கொடூரம்.. தொழுகையில் ஈடுபட்ட பாலஸ்தீனியர் மீது வாகனத்தை ஏற்றிய இஸ்ரேலிய வீரர்!