கையும் களவுமாக ஐநாவிடம் சிக்கிய பாகிஸ்தான்..!! கொத்துக்கொத்தாக தீவிரவாதிகளை சப்ளை செய்தது அம்பலம்.!!

By Ezhilarasan BabuFirst Published Jun 3, 2020, 1:24 PM IST
Highlights

ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட ஒவ்வொரு முயற்சியிலும் இந்தியா தொடர்ந்து பங்களிக்கும், பாகிஸ்தான் தனது சர்வதேச கடமைகளில் இருந்து தவறிவிட்டது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் சுமார் 6,500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதே புகாரை இந்தியா கூறிவந்த நிலையில், யூஎன்எஸ்சி அறிக்கை பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையம் என்பதை தோலுரித்து காட்டுவதாக  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இது குறித்து தெரிவித்துள்ள ஐ.நா மன்ற அறிக்கை, பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகள் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு, இன்னும் பிற வெளிநாட்டு பயங்கரவாதிகளை கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குறிப்பிடத்தக்க பங்குவகிக்கின்றனர் என கூறியுள்ளது. அந்த அறிக்கைக்கு பதில் அளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இது குறித்து தெரிவித்துள்ளதாவது :- பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையமாக உள்ளது என்பதை  ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு  கவுன்சில் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளும், அங்கு உள்ள தீவிரவாத குழுக்களும், அரசு அளிக்கும் ஆதரவை பயன்படுத்திக்கொள்கின்றன. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடமாக உள்ளது மற்றும் பயங்கரவாத  அமைப்புகளுக்கு ஆள்சேர்ப்பு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, நிதி உதவி செய்வது போன்ற நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அரசாங்கம் முழு ஆதரவு அளித்து வருகிறது.

அரசு உதவியுடன் அவர்கள் எந்த அச்சமும் இல்லாமல் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் பாகிஸ்தானை தீவிரவாதத்திற்கு பொறுப்பேற்க வைக்கவேண்டும். அதேநேரத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக, நிலையான, உண்மையான, மொத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.  ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட ஒவ்வொரு முயற்சியிலும் இந்தியா தொடர்ந்து பங்களிக்கும், பாகிஸ்தான் தனது சர்வதேச கடமைகளில் இருந்து தவறிவிட்டது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆப்கனிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தின் மொஹமண்ட் பாஸ், துர் பாபா மற்றும் ஷெர்சாத் மாவட்டங்களில் தலிபான்களுடன், 800 லஷ்கர் மற்றும் 200 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் இடம்பெற்றுள்ளனர் என ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்தவர்கள் மொஹமண்ட் பாஸின் எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள லால் பூரா மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். அதேபோல் குனார் மாகாணத்தில் 220 லஷ்கர் மற்றும் 30 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள், தலிபான்களுடன் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். குனார், நங்கர்ஹார் மற்றும் நூரிஸ்தானில் டிடிபி, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா இருப்பதாக யுஎன்எஸ்சி கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. அங்கு அவர்கள் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கீழ் வேலை செய்வதாகவும், அல்கொய்தாவின் பெரிய பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஐ,நா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

click me!