கொரோனாவை மோட்சம் அனுப்ப இது ஒன்னு போதும்..!! பலநாள் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 3, 2020, 10:31 AM IST
Highlights

கலிபோர்னியா பயோடெக் நிறுவனமான கிலியட் சயின்ஸ், இது குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. விரைவில் அதன் முடிவுகள் மருத்துவ இதழில்  வெளியிடப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ரெமாடெசிவிர்  மூலம் குணப்படுத்த முடியும் என கலிபோர்னியா பயோடெக் நிறுவனமான கிலியட் சயின்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெமாடெசிவிர் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதில் வெறும் ஐந்து நாட்களில் அவர்கள் குணமடைந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளி தீவிர வைரஸ் காய்ச்சலுக்கு ஆளாகாத நிலையில்,ரெமாடெசிவிர்  மூலம் அவரை எளிதில் குணப்படுத்த முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது. உலகமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது, இதுவரை  64 லட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர், இதுவரை சுமார் 3 லட்சத்து 78 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்கா இந்த வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

 

அதைத்தொடர்ந்து பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள்  பேரழிவைச் சந்தித்துள்ளன. கொரோனா வைரஸ் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ரஷ்யாவில் இதுவரை 4 லட்சத்து 23  ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலகமே கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அதற்கான ஆராய்ச்சிகள் மிகத்தீவிரமாக நடந்து வருகிறது, இந்நிலையில், திங்கட்கிழமை அன்று கலிபோர்னியா பயோடெக் நிறுவனமான கிலியட் சயின்ஸ், இது குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. விரைவில் அதன் முடிவுகள் மருத்துவ இதழில்  வெளியிடப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட கடினமான  சோதனையில் ரெமாடெசிவிர் பயன்படுத்தப்பட்டது, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்த மருந்தை அவர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள்  குணமடையும் நாட்கள் 11 முதல் 15 நாட்களாக குறைக்க முடியும் என தெரிவித்துள்ளது. 

இது தேசிய சுகாதார நிறுவனங்கள் நடத்திய ஆய்விலும் உறுதியாகி உள்ளது. இந்த மருந்து IV மூலம் மருந்து நோயாளியின்  உடலுக்கு வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த மருந்து, வைரஸ் மரபணு நகலெடுப்பதை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து ஜப்பானில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவிலும் நோயாளிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதாரண காய்ச்சல் உள்ள அல்லது ஆக்சிஜன் ஆதரவு தேவையில்லாத சுமார் 600 நோயாளிகளை தேர்வு செய்து  பரிசோதனை செய்ததில் 5 முதல் 11 நாட்களுக்குள் சுமார் 65% நோயாளிகள் முன்னேற்றம் அடைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து என உலகநாடுகளால் நம்பப்படுவது குறிப்பிடதக்கது.

 

click me!