காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும்; முதல் முறை குரல் கொடுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்!

By SG BalanFirst Published Mar 26, 2024, 12:04 AM IST
Highlights

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 14 உறுப்பினர்கள் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் உடனடியாக போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இஸ்ரேல் - காசா இடையே ஐந்து மாதங்களுக்கும் மேலாகப் போர் நீடிக்கும் நிலையில், திங்களன்று முதல் முறையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேலின் கூட்டாளியான அமெரிக்கா இதற்கான வாக்கெடுப்பைப் புறக்கணித்துள்ளது.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, வழக்கத்திற்கு மாறாக பெரிய கரவொலி எழுப்பப்பட்டது. பாதுகாப்பு கவுன்சிலின் 14 உறுப்பினர்கள் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் உடனடியாக போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த முடிவு நீடித்த, நிலையான போர்நிறுத்தத்திற்கும் இட்டுச்செல்லவும் இந்தத் தீர்மானத்தில் அழைப்பு விடுக்கபட்டுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல்களில் பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை விடுவிக்கவும் இந்தத் தீர்மானம் கோருகிறது.

கடைசி நிமிடத்தில் ரஷ்யா நிரந்தர போர்நிறுத்தம் என்ற வார்த்தையை நீக்குவதற்கு ஆட்சேபம் தெரிவித்து, வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தது. அது நிறைவேற்றப்படவில்லை.

ஸ்லோவேனியா மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பலதரப்பட்ட நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பு கவுன்சிலில் அரபு நாடுகளின் பிரதிநிதியாக உள்ள அல்ஜீரியா மூலம் இந்த வெற்றிகரமான தீர்மானத்தின் வரைவு கொண்டுவரப்பட்டது.

அமெரிக்கா போர்நிறுத்தத்திற்கான முந்தைய முயற்சிகளைப் புறக்கணித்தது. ஆனால் ரஃபா நகரில் இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை திட்டத்தில் இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதில் இருந்து பின்வாங்கியுள்ளது.

காசா பகுதியில் குடிமக்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ராணுவ உதவியுடன் இஸ்ரேலை ஆதரித்து, இஸ்ரேல் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து போர்நிறுத்த தீர்மானங்களை அமெரிக்கா பலமுறை தடுத்தது. குறிப்பாக முந்தைய தீர்மானங்களில் ஹமாஸை கண்டிக்கும் அம்சம் இல்லை என்பதால் பாதுகாப்பு கவுன்சிலை இஸ்ரேல் விமர்சித்துள்ளது.

இஸ்ரேல் மீதான பாலஸ்தீனிய போராளிக் குழுவின் அக்டோபர் 7 தாக்குதலின் விளைவாக சுமார் 1,160 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என இஸ்ரேலிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் குழுவினர் 250 பணயக்கைதிகளையும் கைப்பற்றியுள்ளனர். அவர்களில் 130 பேர் காசாவில் இருப்பதாக இஸ்ரேல் நம்பப்படுகிறது, இதில் 33 பேர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹமாஸை ஒழிப்பதற்கான பதிலடியாக இஸ்ரேலின் ராணுவ நடத்திய தாக்குதல்களில் 32,000 க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தாக்குதல்களில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் பலியானதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

click me!