Russia Ukraine crisis: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துவரும் போருக்கு உக்ரைன் நாட்டவர்கள் தங்களால் முடிந்தஎதிர்ப்பை ரஷ்யாவுக்கு வெளிக்காட்டி வருகிறார்கள்.அந்தவகையில் ரஷ்ய முதலாளி வைத்திருந்த ரூ.70கோடி சொகுசு கப்பலை கடலில் மூழ்கடிக்க உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பொறியாளர் முயன்றுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துவரும் போருக்கு உக்ரைன் நாட்டவர்கள் தங்களால் முடிந்தஎதிர்ப்பை ரஷ்யாவுக்கு வெளிக்காட்டி வருகிறார்கள்.அந்தவகையில் ரஷ்ய முதலாளி வைத்திருந்த ரூ.70கோடி சொகுசு கப்பலை கடலில் மூழ்கடிக்க உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பொறியாளர் முயன்றுள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த மாதம் 24ம் தேதி முதல் போரில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக போரை ரஷ்யா தீவிரப்படுத்தி, உக்ரைனை நிர்மூலமாக்கி வருகிறது. போருக்கு ரஷ்யா பல்வேறு காரணங்களை, விளக்கத்தை அளித்தபோதிலும் சர்வதேச சமூகம் ரஷ்யாவுக்கு கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளிகாட்டி வருகிறார்கள்
ரஷ்யாவுக்குள்ளே ஒருதரப்பினர் உக்ரைனுக்கு எதிராக போர் தொடுப்பதை எதிர்த்து வருகிறார்கள். ரஷ்யாவில் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டவர்கள் உயிரைக் காப்பாற்றி்க்கொள்ள பல்வேறு நாடுகளுக்கு தஞ்சம் அடைந்தபோதிலும் ரஷ்யா மீதான கோபத்தை ஒவ்வொரு தருணத்திலும் ஏதாவது ஒருவகையில் வெளிப்படுத்தி வருகிறார்கள். வார்த்தைகளால், உணர்ச்சிகளால், செயல்களால், வீரத்தால் ஏதாவது ஒருவகையில் ரஷ்யாவின் அகங்காரத்தை உக்ரைன் மக்கள் எதிர்த்து வருகிறார்கள்.
ரஷ்ய முதலாளியின் ரூ.70 கோடி சொகுசு கப்பலை உக்ரைன் பொறியாளர் கடலில் மூழ்கடிக்க முயன்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஷ்ய ஹெலிகாப்டர் கார்ப்பரேஷனின் முன்னாள் தலைவர்,தொழிலதிர் அலெக்சான்டர் மிஜீவ். அரசுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யும் நிறுவனத்தையும் அகெல்காசான்டர் நடத்தி வருகிறார். இவரிடம் ரூ.70 கோடி மதிப்புள்ள லேடி அனஸ்டாசியா எனும் சொகுசு கப்பல் இருக்கிறது.
இந்தப் கப்பலில் கடந்த 10ஆண்டுகளாக பொறியாளராக உக்ரைனைச் சேர்ந்த டராஸ் ஓஸ்டாப்சக்(வயது55) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் உக்ரைன், ரஷ்யா இடையே போர் தொடங்கியதிலிருந்து டராஸ் ஓஸ்டாப்சக் மிகுந்த வேதனையில்இருந்துள்ளார்.
சமீபத்தில் ரஷ்ய விமானங்கள் உக்ரைனில் ஒரு குடியுருப்பு வளாகத்தை ஏவுகணையால் தரைமட்டமாக்கிய வீடியோவைப் பார்த்து டராஸ் வேதனை அடைந்தார். அந்த ஆயுதங்களை வடிவமைத்தது தனது கப்பல் முதலாளி அலெக்சான்டர் நடத்திய நிறுவனம் உருவாக்கியது என்பதை டராஸ் அறிந்தார்.
தன்னுடைய நாட்டு மக்களைக் கொல்வதற்கு ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் தயாரித்து வழங்கிய அலெக்சான்டரை பழிவாங்க டராஸ் எண்ணினார்.
இதையடுத்து, மல்லோக்ரா கடற்பகுதியில் இருந்தபோது, கப்பலின் எஞ்சின் பகுதி இருந்த அறையில் வால்வுகள் அனைத்தையும் திறந்துவிட்டு, ஓஸ்டாப்சக் கப்பலை கடலில் மூழ்க வைக்க முயன்றுள்ளார்.
அப்போது, கப்பலில் இருந்த பணியாளர்களை அழைத்து கப்பலின் வால்வுகளைத் திறந்துவிட்டுள்ளேன் மூழ்கப்போகிறது, தப்பித்துக்கொள்ளுங்கள் என ஓஸ்டாப்சக் கூறியுள்ளார். இதையடுத்து, கப்பலில் இருந்த பிற ஊழியர்கள் சேர்ந்து கப்பலை மூழ்கவிடாமல் தடுத்துள்ளனர். இருப்பினும் கப்பலின் எஞ்சின் இருந்தபகுதி முழுவதும் தண்ணீல் மூழ்கியதில் பெருத்த சேதமடைந்தது.
இதையடுத்து, மல்லோர்கா தீவிலிருந்து தப்பிக்க முயன்றபோது, ஸ்பெயின் போலீஸார் டராஸ் ஓஸ்டாப்சக்கை கைதுசெய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்றத்தில் டராஸ் கூறுகையில் கூறுகையில் “ என்னுடைய மக்களைக் கொல்வதற்காகஆயுதங்களைத் தயாரித்த அலெக்சான்டரை பழிவாங்கவே இவ்வாறு செய்தேன். இதில் எனக்கு வருத்தமில்லை. உக்ரைனுக்குச்சென்று ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபடப்போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.