Russia War: பரபரப்பு..! இந்தெந்த இடங்களில் பயங்கர தாக்குதல் நடந்த ரஷ்யா திட்டம்.. உள்ளே வருமா அமெரிக்கா..?

By Thanalakshmi V  |  First Published Apr 11, 2022, 4:34 PM IST

ரஷ்யா- உக்ரைன் இடையே 47 வது நாளாக போர் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய படைகள் இன்னும் அதிகமான ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்கலாம் என்றும் அடுத்த சில நாட்கள் முக்கியமானவை என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மக்களிடையே உரையாற்றியுள்ளார்.
 


ரஷ்யா- உக்ரைன் இடையே 47 வது நாளாக போர் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய படைகள் இன்னும் அதிகமான ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்கலாம் என்றும் அடுத்த சில நாட்கள் முக்கியமானவை என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மக்களிடையே உரையாற்றியுள்ளார்.நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்நிலையில் தொடர்ந்து 47 வது நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைனும் போரிட்டு வருகிறது. ரஷ்ய இராணுவத்தின் வான்வழி தாக்குதலால் உக்ரைன் உருகுலைந்து உள்ளது.

இனப்படுகொலை:

Tap to resize

Latest Videos

முக்கிய நகரங்களான கீவ், கார்கீவ், கெர்சன், சுமி, லிவிவ், மரியுபோல், புச்சா உள்ளிட்ட இடங்களில் பயங்கர தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. மரியுபோல், புச்சா நகரங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது இனபடுகொலை நடத்திவருவதாக உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஷெலன்ஸ்கி குற்றச்சாட்டி உள்ளார். வழக்கம் போல் ரஷ்யா இதனை மறுத்துள்ளது.

உக்ரைன் அதிபர் - இங்கிலாந்து அதிபர் ஆலோசனை:

இந்நிலையில் தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் முயன்றும் அதனை உக்ரைன் படைகள் முறியடித்து வருகின்றன. 
தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற முடிந்தும் வெற்றி பெறாத நிலையில் ரஷிய படைகள் தனது கவனத்தை இப்போது கிழக்கு உக்ரைன் மீது திருப்பி உள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் சென்று உக்ரைன் அதிருடன் ஆலோசனை நடத்தினார்.

ரஷ்யா- போர் குற்றம்:

மேலும், ரஷ்ய கூட்டமைப்பின் எந்தவொரு தயாரிப்பையும், இனி இறக்குமதி செய்யப்போவதில்லை என உக்ரைன் அதிபர் அறிவித்தார்.  இதனால், இருநாடுகளுக்கும் இடையிலான போர் இன்னும் தீவிரமாகும் என அஞ்சப்படுகிறது.இந்த நிலையில், உக்ரைன் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அந்த நாட்டின் அதிபர் செலன்ஸ்கி,” போர்க்குற்றங்களை செய்துள்ள ரஷ்யா அதை ஒப்புக்கொள்ள தயங்குகிறது எனவும் அந்நாடு அரக்கத்தனமாக மாறிவிட்டது எனவும் குற்றச்சாட்டினார்.

அடுத்த சில நாட்கள் முக்கியமானவை:

மேலு போரில் நிகழ்ந்திய தவறுகளை ரஷ்யா ஒப்புக்கொள்ளும் காலம் நிச்சயம் வரும். ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு மேலும் உதவ வேண்டும் என்று அவர் பேசினார். மேலும் ரஷ்ய படைகள் கிழக்கு பகுதியில் விரிவான போரை நடத்த வாய்ப்புள்ளது. உக்ரைனுக்கு எதிராக இன்னும் அதிகமான ஏவுகணைகளை பயன்படுத்தலாம். எனவே, அடுத்த சில நாட்கள் முக்கியமானவை என்று உக்ரைன் அதிபர் எச்சரித்துள்ளார்.

click me!