ரஷ்யாவை சுத்துபோடும் உலக நாடுகள்.. உக்ரைனுக்கு உதவ பெல்ஜியம், அமெரிக்கா கொடுத்த ஆயுதம் என்ன தெரியுமா?

By vinoth kumar  |  First Published Feb 28, 2022, 9:02 AM IST

முதன்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உக்ரைனுக்கு உதவும் வெள்ளை மாளிகையால் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்பின் ஒரு பகுதியாக போர் விமானங்களை எதிர்கொள்ளும் அதிவேக ஏவுகணைகளை நேரடியாக வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


உக்ரைனுக்கு 3,000 இயந்திர துப்பாக்கிகள், பீரங்கியை தகர்க்க கண்ணிவெடி குண்டுகளை ஏவும் 200 லாஞ்சர்கள் பெல்ஜியம் வழங்கியுள்ளது. 

உலக நாடுகள் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா உக்ரைன் மீது 4வது கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதில், உக்ரைன் தரப்பில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் தரப்பில் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய தளவாடங்களை ரஷ்ய ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், தங்களது கட்டுப்பாட்டில் செர்னோபேக்வா, கேர்சான், பெர்டியான்ஸ்க், கெனிசெஸ்க் ஆகிய பகுதிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 471 உக்ரைன் ராணுவ வீரர்கள் சரணடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், உக்ரைன் போரை உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பதாக அந்நாட்டு அதிபர் வேதனையுடன் கூறியிருந்தார். இதனையடுத்து,  உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. 

இந்நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்று ஜெர்மனி நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில், முதன்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உக்ரைனுக்கு உதவும் வெள்ளை மாளிகையால் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்பின் ஒரு பகுதியாக போர் விமானங்களை எதிர்கொள்ளும் அதிவேக ஏவுகணைகளை நேரடியாக வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், , உக்ரைனுக்கு 3000 இயந்திர துப்பாக்கிகள், மற்றும் ராணுவ டேங்கிகளை எதிர்க்கும் 200 கையெறி ஏவுகணைகளை வழங்குவதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், ஆயுதம் வழங்கி உதவிய பெல்ஜியத்துக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட அவர்;-  3,000 இயந்திர துப்பாக்கிகளையும், 200 கையெறி குண்டுகளையும் அனுப்பிய பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து உள்ளிட்ட 17  நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளது குறிப்பிடத்தககது. 

click me!