போரை நிறுத்துமாறு ரஷ்ய தூதரகத்திற்கு இந்தியர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
போரை நிறுத்துமாறு ரஷ்ய தூதரகத்திற்கு இந்தியர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் பல உயிர்களும் பறிப்போயின. இந்த போதிலும் போர் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது.
அதன்படி வோல்னோவாகா, மரியுபோல் நகரங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் தற்காலிக போர் நிறுத்ததை ரஷ்யா அறிவித்தது. இதனிடையே போரை நிறுத்துமாறு ரஷ்ய தூதரகத்திற்கு இந்தியர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுக்குறித்து பேசிய உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, இந்தியாவுடன் நட்புறவில் உள்ள நாடுகள் பிரதமர் மோடியிடம் ரஷ்ய போர் குறித்து முறையிட வேண்டும். இந்தியாவின் விவசாய பொருட்கள் இறக்குமதியில் உக்ரைன் முக்கிய பங்கு வகிக்கிறது. ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்தால் வேளாண் பணிகள் பாதிக்கப்படும் உலகளாவிய மற்றும் இந்திய உணவின் பாதுகாப்பின் அடிப்படையிலாவது ரஷ்யாவின் போரை நிறுத்த வேண்டும்.
உக்ரைன் மீதான தாக்குதல் நிறுத்தும்படி இந்தியாவில் உள்ள தூதரகங்களுக்கு இந்தியர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்தியாவில் நட்புறவில் உள்ள நாடுகள் ரஷ்யாவின் போரை நிறுத்தும்படி பிரதமர் மோடியிடம் முறையிட வேண்டும். ரஷ்யாவுடன் நட்புறவில் உள்ள சீனா உள்ளிட்ட நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வர உதவ வேண்டும். ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கல்வி பயில வரும் மாணவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக உக்ரைன் ஒரு நல்ல வரவேற்பு இல்லமாக இருந்து வந்துள்ளது. ஆனால் உக்ரைன் படைகள் வெளிநாட்டு மாணவர்களை பணையக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக பொய்களை கூறி ரஷ்யா அனுதாபம் தேடுகிறது என்று தெரிவித்தார்.