உக்ரைன் - ரஷ்யா போர் எதிரொலி... ரஷ்யாவில் விசா, மாஸ்டர் கார்டு சேவைகள் நிறுத்தம்!!

By Narendran S  |  First Published Mar 6, 2022, 2:41 PM IST

ரஷ்யாவின் கொடூர் தாக்குதலால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருவதால் ரஷ்யாவிற்கு அளிக்கப்பட்டு வந்த சேவைகளை நிறுத்தி வைப்பதாக சர்வதேச பணப்பரிவர்த்தனை நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை தெரிவித்துள்ளன. 


ரஷ்யாவின் கொடூர் தாக்குதலால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருவதால் ரஷ்யாவிற்கு அளிக்கப்பட்டு வந்த சேவைகளை நிறுத்தி வைப்பதாக சர்வதேச பணப்பரிவர்த்தனை நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை தெரிவித்துள்ளன. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் பல உயிர்களும் பறிப்போயின. இந்த போதிலும் போர் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது.

Tap to resize

Latest Videos

அதன்படி வோல்னோவாகா, மரியுபோல் நகரங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் தற்காலிக போர் நிறுத்ததை ரஷ்யா அறிவித்தது. இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருவதால் பல நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு அளித்து வந்த சேவைகளை நிறுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனை தாக்கும் ரஷ்யாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டிற்கு அளிக்கப்பட்டு வந்த சேவைகளை நிறுத்தி வைப்பதாக சர்வதேச பணப்பரிவர்த்தனை நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை தெரிவித்துள்ளன.

இதுக்குறித்து விசாவின் தலைமை நிர்வாக அதிகாரி அல் கெல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் காரணமாக வரும் நாட்களில் பரிவர்த்தனைகள் துண்டிக்கப்படும். மேலும் விசா கார்டுகள் தடை செய்யப்பட்டவுடன் ரஷ்யாவில் வழங்கப்பட்ட கார்டுகள் வெளிநாட்டில் செயல்படாது. வெளிநாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் ரஷ்யாவில் வேலை செய்யாது. இதேபோல் மாஸ்டர் கார்டுகளும் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்தது. விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளின் அறிவிப்பால் தங்கள் நாடு அரசு வங்கியின் வாடிக்கையாளர் சேவைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என ரஷ்யா விளக்கமளித்துள்ளது.

click me!