இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். முன்னதாக போரிஸ் ஜான்சன் ஆட்சியமைக்க தகுதியற்றவர் என்று கூறி அமைச்சர்கள் மற்றும் அவரது கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.க்கள் அவரைக் கைவிடப்பட்டனர். இரண்டு மாநிலச் செயலாளர்கள் உட்பட எட்டு அமைச்சர்கள் கடந்த இரண்டு மணி நேரத்தில் ராஜினாமா செய்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு, பலமிழந்தார். போரிஸ் ஜான்சன் தனது பதவிக்காக பல நாட்கள் போராடிய பிறகு, ஒரு சில கூட்டணி கட்சிகளைத் தவிர மற்ற அனைவராலும் ஜான்சன் கைவிடப்பட்டார். இதை அடுத்து இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுக்குறித்து கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவர் ஜஸ்டின் டாம்லின்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், அவருடைய ராஜினாமா தவிர்க்க முடியாதது.
இதையும் படிங்க: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் இந்திய வம்சாவழியான ரிஷி சுனக்?
ஒரு கட்சியாக நாம் விரைவாக ஒன்றிணைந்து முக்கியமானவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இவை பல முனைகளில் தீவிரமான நேரமாகும் என்று தெரிவித்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் அடுத்த வாரம் தேர்வு செய்யப்படுவார் என்றும் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, போரிஸ் ஜான்சன் காபந்து பிரதமர் பொறுப்பில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது. பல அமைச்சர்களை இழந்த பிறகு, போரிஸ் ஜான்சன் பதவியில் தொடர தேவையான நம்பிக்கையையும் அதிகாரத்தையும் இழந்துவிட்டார். போரிஸ் ஜான்சனுக்கான ஆதரவு எல்லாம், சமீபத்திய பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான 24 மணி நேரத்தில் காணாமல் போய்விட்டது. நிதியமைச்சர் நாதிம் ஜஹாவி மட்டும் அவருடைய பதவிக்கு கடந்த 5 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யலைன்னா; ராணி எலிசபெத் பதவியை பறிப்பாரா?
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் அடுத்த வாரம் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவித்தார் pic.twitter.com/4owbQ2cDGL
— Asianetnews Tamil (@AsianetNewsTM)ஆரம்பத்தில், போரிஸ் ஜான்சன் பதவி விலக மறுத்து, நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார். மைக்கேல் கோ-வை பதவி நீக்கம் செய்தார். அவர் போரிஸ் ஜான்சனின் உயர்மட்ட அமைச்சரவைக் குழுவில் இருந்தவர். போரிஸ் ஜான்சன் தனது பதவியை உறுதிப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இருந்தபோது, ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதலில் கூறியவர்களில் ஒருவர். ஆனால், ராஜினாமாக்கள் குவிந்ததால், அவரது நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பது தெளிவாகியது. பல அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால், காலியாக உள்ள பதவிகளை யாரும் ஏற்கத் தயாராக இல்லாத நிலையில் அரசாங்கம் முடங்கிக் கிடக்கிறது. இதனிடையே போரிஸ் ஜான்சனின் ராஜினாமா பிரிட்டனுக்கு நல்ல செய்தி, ஆனால், இந்த ராஜினாமா நீண்ட காலத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டும். அவர் எப்போதும் பதவிக்கு தகுதியற்றவர் என்று எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.