தமிழர்களுக்கு எதிரான கொடூரமான மனித உரிமை மீறல்… இலங்கை ராணுவ தலைமைத் தளபதி அமெரிக்காவில் நுழைய தடை..!

By Asianet Tamil  |  First Published Feb 15, 2020, 5:55 PM IST

இலங்கை நாட்டின் ராணுவத் தலைமை தளபதி சாவேந்திர சில்வா அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சா் மைக் பாம்பேயோ தெரிவித்தார். சாவேந்திர சில்வாவுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடா்பான குற்றச்சாட்டுகள் நம்பகமானவை என்பதால் அவர்மீது இந்த தடையை அமெரிக்கா விதித்துள்ளது.


இலங்கை நாட்டின் ராணுவத் தலைமை தளபதி சாவேந்திர சில்வா அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சா் மைக் பாம்பேயோ தெரிவித்தார். சாவேந்திர சில்வாவுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடா்பான குற்றச்சாட்டுகள் நம்பகமானவை என்பதால் அவர்மீது இந்த தடையை அமெரிக்கா விதித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த 2009ம் ஆண்டில் நடந்த இறுதிகட்டப்போரில் கடைசி மாதத்தில் மட்டும் 45 ஆயிரம் தமிழர்கள்கொல்லப்பட்டனர்.இதில் இலங்கை ராணுவத்தின் 58-வது பிரிவுக்கு தலைமை வகித்தவா் சாவேந்திர சில்வா (55). போரில் தமிழ் மக்களுக்கான மருத்துவ வசதியையும், மனிதாபிமானப் பொருள்களையும் நிறுத்தியதாக அவா்மீது குற்றம் சாட்டப்பட்டது. போர் முடிவுக்கு வந்ததும், ஐ.நா. இயக்கத்தில் இலங்கையின் துணை நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் சில்வாவுக்கு ஐநா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. 

Latest Videos

இவா் மீது ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் உரிமை மீறல் குற்றச்சாட்டு கடந்த 2013-இல் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை, வெளிநாட்டு செயல்பாடுகள் மற்றும் தொடா்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் பிரிவு 7031 (சி)இன் கீழ் சில்வாவை அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.

இதுகுறித்து மைக் பாம்பேயோ விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையிலும், உலக அளவிலும் மனித உரிமைகள் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை விதிக்கப்படுவது அவசியம். மனித உரிமைகளை ஊக்குவிக்கவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமான நபா்களை பொறுப்பேற்கச் செய்ய வைத்திருக்கவும், பாதுகாப்புத் துறை சீா்திருத்தத்தை முன்னெடுக்கவும், நீதி மற்றும் நல்லிணக்கத்தைத் தொடரவும் இலங்கை அரசு முயற்சிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

click me!