வாழ்நாள் முழுவதும் மகாத்மா காந்தியின் போதனைகளைக் கேட்டு அதில் ஈர்க்கப்பட்டவன். தற்போது உண்மையான சமூக நல்லிணக்கத்துக்கான நிலைமைகளை உருவாக்க வேண்டும். அதுவே அவசியமானது. காந்தியின் ஆன்மா முன்பைவிட இப்போது அதிகம் நமக்கெல்லாம் தேவைப்படுகிறது.
டெல்லி கலவரத்தில் மக்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டெரஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகப் போராடியவர்களும் எதிராகப் போராடியவர்களும் மோதிக்கொண்டதால், டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் இஸ்லாமியர்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டன. இதேபோல மோதலில் இஸ்லாமியர்களின் மசூதிகள், கடைகளும் சூறையாடப்பட்டன. இந்தக் கலவரத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கலவரம் கட்டுப்படுத்துவிட்டது.
இந்நிலையில் டெல்லி கலவரம் தொடர்பாக ஐ.நா. சபை பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டெரஸ் கருத்து தெரிவித்துள்ளார். “டெல்லி கலவரத்தில் மக்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. இந்தியாவின் நிலைமையையும் தொடர்ந்து நான் கவனித்து வருகிறேன். நாங்கள் கேள்விப்பட்ட மரணங்கள் குறித்து தகவல்களால் மிகவும் வருந்துகிறோம். வன்முறை சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன்.
வாழ்நாள் முழுவதும் மகாத்மா காந்தியின் போதனைகளைக் கேட்டு அதில் ஈர்க்கப்பட்டவன். தற்போது உண்மையான சமூக நல்லிணக்கத்துக்கான நிலைமைகளை உருவாக்க வேண்டும். அதுவே அவசியமானது. காந்தியின் ஆன்மா முன்பைவிட இப்போது அதிகம் நமக்கெல்லாம் தேவைப்படுகிறது. போராட்டக்காரர்களை அமைதியான வழியில் போராட அனுமதி அளிக்க வேண்டும். பாதுகாப்பு படையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” என ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்தார்.