பாகிஸ்தானின் ரணத்தை குத்திக் கிழித்த அமெரிக்கா...!! இம்ரானை வெறுப்பேற்றிய வெளியுறவு மந்திரி பேச்சு...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 29, 2020, 2:58 PM IST
Highlights

அமெரிக்க இந்திய கூட்டாண்மைக்கு  அமெரிக்கா அளிக்கிற மதிப்பை நிரூபிக்கிறது  எனக் கூறியுள்ளார் . மேலும் ஜனநாயக மரபுகள் நம்மை இணைக்கிறது .  இருதரப்பு நலன்கள் நம்மை  பிணைக்கிறது .  ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இந்தியாவுடனான உறவு இன்னும் வலுவாக வளரும் எனவும் அவர் கூறினார்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணம் இந்தியா மீது  நாங்கள் வைத்துள்ளார்  நன்மதிப்பை நிரூபிக்கிறது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் .   அமெரிக்க அதிபர் டிரம்ப்பின்  இந்திய பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில் மைக் பாம்பே இவ்வாறு கூறியுள்ளார் .  அவரின் இந்த கருத்து சீனா,  பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது .  அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு முதல் முறையாக கடந்த 24 25-ம் தேதிகளில்  அரசுமுறைப் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார். 

இந்திய பயணத்தை ட்ரம்ப்  வெகுவாகப் புகழ்ந்துள்ளார்,   அதேபோல் ட்ரம்பின் பயணத்தின்போது இந்தியா-அமெரிக்கா இடையே சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது .  இது சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு மிகுந்த எரிச்சலை  ஏற்படுத்தியுள்ளது .  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ,  அமெரிக்கா- இந்தியா இடையேயான ராணுவ ஒப்பந்தம் ஆசிய பிராந்தியத்தில்  நிலையற்ற தன்மையை உருவாக்கும் அமைதியின்மையை ஏற்படுத்தும் இந்த போக்கு எங்களை போன்ற மற்ற நாடுகளுக்கு கவலையளிக்கிறது என விமர்சித்துள்ளார் . 

இந்நிலையில் ட்ரம்பின் இந்தியப் பயணம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ டுவிட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்  ,   ஜனாதிபதி ட்ரம்ப்  முதல் முதல்முறையாக இந்த வாரம் மேற்கொண்ட இந்திய பயணமானது .  அமெரிக்க இந்திய கூட்டாண்மைக்கு  அமெரிக்கா அளிக்கிற மதிப்பை நிரூபிக்கிறது  எனக் கூறியுள்ளார் . மேலும் ஜனநாயக மரபுகள் நம்மை இணைக்கிறது . இருதரப்பு நலன்கள் நம்மை  பிணைக்கிறது .  ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இந்தியாவுடனான உறவு இன்னும் வலுவாக வளரும் எனவும் அவர் கூறினார் .   அவரின் கருத்து இந்தியாவிற்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது . பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.  
 

click me!