கொரோனா வைரஸ் வந்தால் தொலைச்சுக்கட்டிடுவேன்... வடகொரிய அதிபர் கடும் மிரட்டல்..!

By Thiraviaraj RM  |  First Published Feb 29, 2020, 1:18 PM IST

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தவறினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், உயர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தவறினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், உயர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2800-ஐ தாண்டியுள்ளது. மேலும் சுமார் 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வடகொரியாவில் கொரோனா பரவுவதை தடுக்க ஏற்கனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் வடகொரியா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல சர்வதேச விமானங்கள் மற்றும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Latest Videos

இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கொரோனா வைரஸ் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனாவுக்கு எதிரான போராட்டம் மக்களை பாதுகாப்பதற்கான மிக முக்கிய நடவடிக்கை என்றும், அதில் அதிகபட்ச கவனம் தேவை என்றும் அதிகாரிகளுக்கு, கிம் ஜான் உன் அறிவுறுத்தியதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தனை கட்டுப்பாடுகளை மீறி, கொரோனா நாட்டிற்குள் நுழைந்தால், அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதிபர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஊழல் செய்த குற்றச்சாட்டின் பேரில் வடகொரியாவில் இரண்டு மூத்த அதிகாரிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். தங்கள் நாட்டில் கொரோனா பரவுவதை தடுக்க, கொரோனா பாதித்த ஒருவரை, அந்நாட்டு அதிகாரிகள் சுட்டுக்கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
 

click me!