உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகளுக்கான செலவுகளை சீனாவே ஏற்க வேண்டும் என பாஜக எம்.பி., ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தி உள்ளார்.
உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகளுக்கான செலவுகளை சீனாவே ஏற்க வேண்டும் என பாஜக எம்.பி., ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தி உள்ளார்.
சீனாவின் வுகானில் கடந்தாண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக தென்கொரியா, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸானது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சீன அரசின் சுகாதாரத்துறை வைரஸ் தாக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்திவிட்டதாக கூறி வந்த போதிலும், இதனால், ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்காப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,251 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணரான மார்க் லிப்சிட்ச், உலகில் உள்ள 40 முதல் 70 சதவிகித வயதானவர்கள்வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்று கணித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.பி., ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸால் உலகில் 40 -70 சதவிகிதம் பேருக்கு பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக உலகம் சீனா மீது வழக்குத் தொடர வேண்டுமா? இந்த தொற்றுநோய்க்கான செலவுகளை சீனா செலுத்த வேண்டும்’’என அவர் தெரிவித்துள்ளார்.