ஒரு கணவருடன் இணைந்து வாழும் இரண்டு மனைவிகள்... இப்படியொரு ஒற்றுமையா..?

Published : Jan 09, 2021, 12:33 PM IST
ஒரு கணவருடன் இணைந்து வாழும் இரண்டு மனைவிகள்... இப்படியொரு ஒற்றுமையா..?

சுருக்கம்

வெளிநாட்டில் ஒரு கணவருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழும் 2 இந்திய இளம்பெண்கள்! காதல் வந்தது எப்படி? த லைசு ற்றவைக்கும் ஆச்சரிய சம்பவம்  

வெளிநாட்டில் ஒரு கணவருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழும் 2 இந்திய இளம்பெண்கள்! காதல் வந்தது எப்படி? த லைசு ற்றவைக்கும் ஆச்சரிய சம்பவம்

அமெரிக்காவில் கணவனை விவாகரத்து செய்த இந்திய இளம்பெண் தனது தோழியின் கணவர் மீது காதல் கொண்ட நிலையில் மூவரும் சேர்ந்து ஒரே வீட்டில் 10 ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் வசித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

31 வயதான பிடு கவுர் என்ற பெண்ணுக்கும், 36 வயதான ஸ்பீடி சிங் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே ம னக்கசப்பு ஏற்பட்டு பிடு கவுர் கணவரை விவாகரத்து செய்தார். பின்னர் தனது பள்ளிகால நண்பர்களான ஸ்பீடி சிங் மற்றும் அவர் மனைவி சன்னியை பிடு சந்தித்துள்ளார். தங்கள் வீட்டில் வந்து ஒருவாரம் தங்கும்படி தம்பதி பிடுவிடம் கூற, அவரும் வந்து தங்கியுள்ளார். 

அப்போது ஸ்பீடிக்கும், பிடுவுக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில், ஒருவரும் ஒன்றாக இணைந்துள்ளனர்.  இதன்பின்னர் நடந்த சம்பவம் தான் ஆச்சரியம். அதாவது ஸ்பீடியுடன் சன்னியும், பிடுவும் உடன் சேர்ந்து ஒன்றாக வாழ முடிவு செய்தனர். இதற்கு இரண்டு பெண்களும் சம்மதித்தனர். தற்போது 10 ஆண்டுகளாக மூவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். ஸ்பீடி- சன்னி தம்பதிக்கு இரண்டு பிள்ளைகளும், ஸ்பீடி – பிடு தம்பதிக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

இவர்கள் மூவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் வழக்கத்திற்கு மாறான காதலை கொண்டுள்ளதால் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் அவர்களுடன் சரியாக பேசவில்லை என தெரிகிறது. மூவரும் ஒருவருக்கொருவர் எந்தவொரு ஒளிவு மறைவும் இன்றி வாழுவதால் தங்களுக்குள் பொறாமை மற்றும் பிரச்சினைகள் ஏற்படவில்லை என கூறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஜப்பானை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம்! சிறிது நேரத்தில் விலகிய சுனாமி எச்சரிக்கை!
40 நிமிடம் காக்க வைக்கப்பட்ட ஷெரிப்..! மோடியை தேடி வரும் புடின்..! பாகிஸ்தான் பிரதமரின் பரிதாப நிலை!