கனடாவின் புதிய அமைச்சரவையில் 2 இந்திய வம்சாவளி பெண்கள்!

அனிதா ஆனந்த் மற்றும் கமல் கேரா ஆகிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய தலைவர்களில் கேராவும் ஒருவர்.


கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் மற்றும் கமல் கெரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கனடாவின் பிரதமராக மார்க் கார்னி வெள்ளிக்கிழமை பதவியேற்றார். ஜனவரி மாதம் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ததை அடுத்து, மார்க் கார்னி அடுத்த பிரதமராக நியமிக்கப்பட்டார்.

Latest Videos

மார்க் கார்னியின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் முக்கியப் பொறுப்புகளைப் பெற்றுள்ளனர். அனிதா ஆனந்த் (58) அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், கமல் கெரா (36) சுகாதார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையிலும் இடம்பெற்ற இவர்கள் வெவ்வேறு இலாகாக்களுடன் தங்கள் அமைச்சர் பதவியைத் தக்கவைத்துள்ளனர்.\

பாகிஸ்தான் இராணுவத் தொடரணி மீது தாக்குதல்: 90 வீரர்கள் பலி?

கமல் கெரா யார்?

கமல் கெரா பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவரது குடும்பம் கனடாவுக்குக் குடிபெயர்ந்தது. பின்னர் டொராண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். கனடா பிரதமரின் வலைத்தளத்தின்படி, கமல் கெரா முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு பிராம்ப்டன் வெஸ்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய பெண்களில் இவரும் ஒருவர் கெரா. செவிலியரான இவர், சமூக சேவகராகவும் அரசியல்வாதியாகவும் அறியப்பட்டுகிறார். கமல் கெரா எப்போதும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அனிதா ஆனந்த் யார்?

அனிதா ஆனந்த் மார்க் கார்னியின் அமைச்சரவையில் ஒரு பகுதியாக உள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு பிரதமராக வருவதற்கான வாய்ப்புள்ளவர்களில் முன்னணிப் போட்டியாளராக இருந்தார், ஆனால் ஜனவரியில் அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அனிதா ஆனந்த் நோவா ஸ்கோடியாவில் ஒரு கிராமப்புறத்தில் பிறந்தார். 1985 இல் ஒன்ராறியோவுக்கு குடிபெயர்ந்தார். 2019 ஆம் ஆண்டில், அவர் ஓக்வில்லில் இருந்து முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். முன்னதாக, அவர் கருவூல வாரியத்தின் தலைவராகவும், தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும், பொது சேவை மற்றும் கொள்முதல் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். அனிதா ஆனந்த் ஒரு வழக்கறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.

கார்னியின் அமைச்சரவை:

ட்ரூடோவுக்குப் பதிலாக பிரதமராகப் போட்டியிடும் முன்னணி வேட்பாளரான அனிதா ஆனந்த், மார்ச் 1ஆம் தேதி தனது முடிவை மாற்றிக்கொண்டார். ஜனவரி மாதம் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். "கனடா வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தை எதிர்கொள்கிறது" என்றும் கூறினார்.

கார்னியின் அமைச்சரவையில் 13 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் உள்ளனர். இது ட்ரூடோவின் 37 பேர் கொண்ட அமைச்சரவையைவிடச் சிறியது. பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, பிரதமர் கார்னி தனது அமைச்சரவையின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார்.

இன்பாக்ஸ் நிரம்பிருச்சா? தேவையில்லாத ஈமெயில்களை மொத்தமாக அழிப்பது எப்படி?

click me!