சமூக ஊடகத்தில் ஓசி அரசியல் விளம்பரங்களுக்கு ஆப்பு..!! அதிரடி தடைபோட்டது டுவிட்டர் நிறுவனம்...!!

By Ezhilarasan Babu  |  First Published Oct 31, 2019, 2:37 PM IST

உலகளவில் அனைத்து அரசியல் விளம்பரங்களையும் நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்றும், டுவிட்டரில் தேவையில்லாத வதந்திகளை அதில் பதிவேற்றம் செய்யப்படுவதுடன் அத்தகவல்கள் சமூகத்தில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுகிறது.  இணைய விளம்பரம் மூலம் நம்பமுடியாத சக்திவாய்ந்த மற்றும் வணிக விளம்பரங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும்.  அரசியலுக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை உருவாக்கிவிடுகிறது. 


அரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் இடம் கிடையாது என அதன் தலைமை நிர்வாக அதிகாரி அதிரடியாக தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் பெருகிவரும் அரசியல் போட்டி காரணமாக அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமான அல்லது எதிர்தரப்பினர் மீது அவதூறான தகவல்களை பரப்பிவருவதுடன் அதற்கு டுவிட்டர் பெரும்  சாதனமாக இருக்கிறது என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் ட்விட்டர் நிறுவன தலைமை நிர்வாகி ஜாக் ஜேக் டோர்சே, டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Latest Videos

அடுத்த மாதம் முதல் தடை அமலுக்கு வரும் என கூறியுள்ள அவர்.  அமெரிக்க தேர்தலில் ஏற்பட்ட அவதூறு பிரச்சாரத்தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர்,  உலகளவில் அனைத்து அரசியல் விளம்பரங்களையும் நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்றும், டுவிட்டரில் தேவையில்லாத வதந்திகளை அதில் பதிவேற்றம் செய்யப்படுவதுடன் அத்தகவல்கள் சமூகத்தில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுகிறது.  இணைய விளம்பரம் மூலம் நம்பமுடியாத சக்திவாய்ந்த மற்றும் வணிக விளம்பரங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும்.  அரசியலுக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை உருவாக்கிவிடுகிறது. 

இதில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அவர்களின் வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  எனவே நவம்பர் 22ஆம் தேதி முதல் இந்தக் கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து  ட்விட்டருக்கு  போட்டியாளதாக உள்ள ஃபேஸ்புக், யூடியுப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் தேர்தல்களில் நடத்தக்கூடிய தவறான தகவல்களை பரப்பி விளம்பரப்படுத்துவதை தடுக்கும் அழுத்த த்திற்கு உள்ளாக நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார். டுவிட்டரின் இந்த  அதிரடி முடிவு குறித்து  பல தரப்பில் இருந்து ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள் எழும்பிவருகிறது. 
 

click me!