பாகிஸ்தானில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 25 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 25 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கராச்சி-ராவல்பிண்டி இடையே தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று காலை லியாகத்பூரில் அருகே சென்று கொண்டிருந்தபோது ஒரு பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தீ மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவியது. இதனையடுத்து, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. தீப்பிடித்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.
இந்த விபத்தில் 25 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக உடனே மீட்புக்குழுவினர் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், படுகாயமடைந்த 13 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.