புதினை பார்க்க கால்கடுக்க காத்திருந்த துருக்கி அதிபர்...!! எர்டோகனுக்கு ரஷ்யாவில் கிடைத்த அவமரியாதை..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 10, 2020, 4:48 PM IST
Highlights

முன்னதாக மாஸ்கோவுக்கு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற  துருக்கி அதிபர் எர்டோகன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நீண்ட நேரம் காக்கவைத்துள்ளார்.  
 

இட்லிப் விவகாரம் குறித்து  ரஷ்ய அதிபரை சந்தித்து பேச தலைநகர் மாஸ்கோவுக்கு வந்த துருக்கி அதிபரை  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நீண்ட நேரம் காக்க  வைத்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .  அதற்கான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்  படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன .  இந்நிலையில் ரஷ்ய உதவியுடன் சிரிய ராணுவம் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது .  ஆனால் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவளித்து வருகிறது . 

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சிரியாவில் நடந்து வந்த சண்டையில் சிரிய மற்றும் துருக்கி என இரண்டு தரப்பிலும் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.  இந்த சண்டையில் சிரிய படைகளுக்கு ஆதரவளிக்கும் ரஷ்யா கிளர்ச்சியாளர்களையும்  துருக்கி படைகளையும் தாக்கி துவம்சம் செய்து வருகிறது இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் இட்லிப் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர்  புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ சென்றார் ,  இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இட்லிப் மாகாணத்தில் நடைபெற்று வரும் சண்டையை நிறுத்தத்தில் இருநாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது .  இந்நிலையில் கடந்த 6ம் தேதி முதல் இட்லிப் மாகாண  சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது .  முன்னதாக மாஸ்கோவுக்கு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற  துருக்கி அதிபர் எர்டோகன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை  நீண்ட நேரம் காக்கவைத்துள்ளார்.  

புதினை சந்திக்க வந்த  துருக்கி அதிபர்  எர் டோக்கனை தடுத்து நிறுத்த ரஷ்ய அரசு அதிகாரிகள் அவரை தனி அறையில் சுமார் இரண்டு மூன்று நிமிடத்திற்கு மேலாக நிற்க வைத்துள்ளனர்.   இதனால் தனது சக அதிகாரிகளுடன் அந்த அறையிலேயே அவர் மிகுந்த கவலையுடன் காத்து நிற்கிறார் .  சிறிது நேரம் கழித்து அவரை இருக்கையில்  அமரும்படி கூறுகின்றனர் .  பின்னர் அதைத் தொடர்ந்து மேலும் 2. 30 நிமிடங்கள் அந்த அறையில் காத்திருக்கும் அவர் பின்னர்  வெளியேறி  ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார்.   இச்சம்பவம் துருக்கி  அதிபரை அவமானப்படுத்தும் நோக்கிலேயே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர் .

 

 

click me!