தனி அறையில் பிரார்த்தனை செய்த போப் ஆண்டவர்..!! கொரோனா அச்சத்தால் எடுத்த திடீர் முடிவு..!!

Published : Mar 10, 2020, 04:10 PM IST
தனி அறையில் பிரார்த்தனை  செய்த போப் ஆண்டவர்..!! கொரோனா அச்சத்தால் எடுத்த திடீர் முடிவு..!!

சுருக்கம்

இந்நிலையில் வைரஸ் பரவாமல் தடுக்க இத்தாலி அரசு மேற்க்கொண்டுள்ளது கடுமையான நடவடிக்கைகளை வாடிகன் நகரமும் பின்பற்றி வருகிறது . இந்நிலையில் வாட்டிகன் நகரில் அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. 

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பீதியில் இருந்து வரும் நிலையில் உலக மக்களுக்காக போப் ஆண்டவர் தனிமையில் பிரார்த்தனை நடத்தியுள்ளார்.  வழக்கமாக ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கொரோனா வைரஸ் பீதி காரணமாக தனது சிற்றாலயத்தில் தனியாக பிரார்த்தனை நடத்தினார் .சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.  இதுவரையில் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் . 

உலக அளவில் ஒரு லட்சத்து 10 ஆயிரம்  பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான இத்தாலியில் தான் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது .  இது வரையில் இத்தாலியில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் .  சுமார் 7,375 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடான வாட்டிகன் நகரிலும் கொரோனாவுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் .  இந்நிலையில் வைரஸ் பரவாமல் தடுக்க இத்தாலி அரசு மேற்க்கொண்டுள்ளது கடுமையான நடவடிக்கைகளை வாடிகன்  நகரமும் பின்பற்றி வருகிறது . இந்நிலையில் வாட்டிகன் நகரில் அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. 

மேலும் ,  தேவாலயங்களில் நடத்தப்படும் பிரார்த்தனைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன .  வழக்கமாக நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து தேவாலயத்தில் பிரார்த்தனை மற்றும் போப்பாண்டவர் பிரான்சிஸ் இது காரணமாக நேற்று காலை தனது அறையில்  தனியாக பிரார்த்தனை நடத்தினர்.  அவரது பிரார்த்தனை நேரலை செய்யப்பட்டது ,  ஏற்கனவே போப் ஆண்டவருக்கு 83 வயதாகும் நிலையில் அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்து வரும்  சூழ்நிலையில் எளிதில் அவருக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரார்த்தனைக் கூட்டங்களை அவர் தவித்து வருவதாக கூறப்படுகிறது.  

 

PREV
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!