கானா மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றாகும். அந்நாட்டின் போனொ கிழக்கு மாகாணம் கின்டபோ நகரில் இருந்து டெட்ஸிமென் நகர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கின்டபோ-டமெல் தேசிய நெடுச்சாலையில் உள்ள அமொமா குவன்டா என்ற கிராமம் அருகே பேருந்து சென்றபோது சாலையில் எதிரே வந்துகொண்டிருந்த மற்றொரு பேருந்து மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
கானா நாட்டில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கானா மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றாகும். அந்நாட்டின் போனொ கிழக்கு மாகாணம் கின்டபோ நகரில் இருந்து டெட்ஸிமென் நகர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கின்டபோ-டமெல் தேசிய நெடுச்சாலையில் உள்ள அமொமா குவன்டா என்ற கிராமம் அருகே பேருந்து சென்றபோது சாலையில் எதிரே வந்துகொண்டிருந்த மற்றொரு பேருந்து மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதியதில் தீ பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியது. இந்த கோர சம்பவத்தில் 35 பேர் உடல் கருகி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக மீட்புக்குழுவினருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டுக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.