இந்தியாவை அவமானப்படுத்திய ட்ரம்புக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்..!! தோல்வி முகத்தில் ட்ரம்ப்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 4, 2020, 10:22 AM IST
Highlights

இந்த முடிவு ட்ரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு நெருக்கத்தில் இந்தியாவை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்ததுடன், ட்ரம்ப்பின் மகன் ட்ரம்ப் ஜூனியர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்திய எல்லை வரை படத்தை வெளியிட்டது இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

ஒட்டுமொத்த உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதில் நியூயார்க் மாநிலத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இது ட்ரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும்  நிலையில் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு  நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன மொத்தமுள்ள 50 மாகாணங்களில் மொத்தம் 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க  அதிபராக வர முடியும்.  தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்  135 இடங்களில்  முன்னிலை பெற்றுள்ளார். அதே நேரத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 108 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளார். 

இந்நிலையில் பல மாகாணங்களில் மாறி மாறி முன்னிலை நிலவரங்கள் வந்தவண்ணம் உள்ளன, அதில் அமெரிக்காவின் செல்வந்தர்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியான நியூயார்க் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.ஜோ பைடன் 76 சதவீத வாக்குகளை அங்கு பெற்றுள்ளார். ஆனால் ட்ரம்ப் வெறும் 23 சதவீத வாக்குகளே அங்கு பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்த முடிவு ட்ரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு நெருக்கத்தில் இந்தியாவை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்ததுடன், ட்ரம்ப்பின் மகன் ட்ரம்ப் ஜூனியர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்திய எல்லை வரை படத்தை வெளியிட்டது இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ட்ரம்ப் தோல்வி முகத்தில் சென்று கொண்டிருப்பது இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!