பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து விலகும் அமெரிக்கா… சர்ச்சை ஆணையில் கையெழுத்திட்ட டிரம்ப்

Asianet News Tamil  
Published : Jan 25, 2017, 10:17 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து விலகும் அமெரிக்கா… சர்ச்சை ஆணையில் கையெழுத்திட்ட டிரம்ப்

சுருக்கம்

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, புருனே, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகள் இனைந்து வர்த்தகத்தில் ஈடுபட பசிபிக்நாடுகளின் தடையில்லா ஒப்பந்தம் நடை முறையில் உள்ளது.

டி.பி.பி. என்று அழைக்கப்படும் இந்த அமைப்பில் உள்ள நாடுகள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தங்களுக்குள் வர்த்தகம் செய்ய அந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அமெரிக்காவின் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க  அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், நான் அதிபரானால் அமெரிக்கர்களின் 

வேலைவாய்ப்பை தட்டிப்பறிக்கும் பசிபிக் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என உறுதி மொழி அளித்து இருந்தார்.

இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் புதிய அதிபராக பதவி ஏற்றார். அவர் நேற்று வெள்ளை மாளிகையில் உள்ள அலுவலகத்தில் இருந்து முழு நேரமாக பணிகளைகவனித்தார்.அப்போது பசிபிக் தடையில்லா ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக உத்தரவு பிறப்பித்தார்.

டிரம்ப் அதிபரானதும் போட்ட முதல் உத்தரவு இதுவாகும்.. மேலும், ஓவல் அலுவலக ஊழியர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது ‘நாப்டா’ எனப்படும் வடஅமெரிக்கதடையில்லா 

வர்த்தக ஒப்பந்தத்தையும் மறுபரிசீலனை செய்ய இருப்பதாக கூறினார்.

அதற்காக மெக்சிகோ மற்றும் கனடாவுடன் பேச இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கிடையே அமெரிக்கா இல்லா பசிபிக் தடையில்லா ஒப்பந்தம் முழுமை அடையுமா? என்பதில்தனக்கு சந்தேகம் இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்கோ அபே அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அமேசான் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! H-1B விசா வரும் வரை இந்தியாவில் இருந்தே வேலை செய்யலாம்!
தண்ணீர் இல்ல அது விஷம்.. இந்தூர் விவகாரத்தில் பாஜக-வை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி