suella braverman: பிரிட்டனின் உள்துறை அமைச்சராக தமிழரான சுயல்லா பிரேவர்மேன் நியமனம்: யார் இவர்?

Published : Sep 07, 2022, 10:18 AM IST
suella braverman: பிரிட்டனின் உள்துறை அமைச்சராக தமிழரான சுயல்லா பிரேவர்மேன் நியமனம்: யார் இவர்?

சுருக்கம்

பிரிட்டனின் உள்துறை அமைச்சராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட வழக்கறிஞர் சுயல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். 

பிரிட்டனின் உள்துறை அமைச்சராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட வழக்கறிஞர் சுயல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவராக சுயல்லா பிரேவர்மேன்இருந்தாலும் இவரின் பூர்வீகம் இந்து தமிழ்பாரம்பரியம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன் பிரீத்திபடேல் இருந்தநிலையில், அடுத்தகாக இந்திய வம்சாவளி பிரேவர்மேன் நியமித்து புதிய பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டுள்ளார்.

42வயதான சுயல்லா பிரேவர்மேன் கன்சர்வேட்டிவ் கட்சியின் தென்கிழக்கு இங்கிலாந்தின் பரேஹாம் தொகுதியிலிருந்து எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். போரிஸ் ஜான்ஸன் பிரதமராக இருந்தபோது, அவரின் அரசில் அட்டர்னி ஜெனரலாக சுயல்லா பிரேவர்மேன் பணியாற்றினார். 

இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர்..மார்கரெட் தாட்சரின் மறுஉருவம் - யார் இந்த லிஸ் டிரஸ் ?

போரிஸ் ஜான்ஸன் பிரதமர் பதவியிலிருந்து விலகியபோது, அந்தப் பதவிக்கு சுயல்லா பிரேவர்மேனும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுயல்லா பிரேவர்மேனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. தமிழ் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர் சுயல்லா பிரேவர் மேன். இவரின் தாய் பெயர் உமா. தந்தை கோவா மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டா பெர்னான்டஸ். மொரியஷில் இருந்து பிரிட்டனுக்கு உமா இடம் பெயர்ந்தவர், தந்தை கிறிஸ்டி பெர்னான்டஸ் கென்யாவிலிருந்து லண்டனுக்கு கடந்த 1960களில் குடிபெயர்ந்தவர்..மொரியஷயஸ் தீவில் நீ மூட்டியன் பிள்ளை தமிழ்க்குடும்பத்தில் உமா பிறந்தவர்.

பிரேவர்மேனுக்கு இருக்கும் முக்கிய சாவாலாக இருப்பது, பிரிட்டனுக்கு வரும் அகதிகள், சட்டவிரோதமாக வருவோர்களை எவ்வாறு சமாளிப்பது, அவர்களுக்கு அடைக்கலம் தருவதும், வழக்குதொடர்வது என்று பிபிசி தெரிவித்துள்ளது.

china earthquake: சீனாவை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்: 50 பேர் உயிரிழப்பு: 50,000 பேர் பாதுகாப்பாக இடமாற்றம்

பிரெக்ஸி்ட்டிலிருந்து  பிரிட்டன் வெளியேறுவதற்கு தீவிரமாக ஆதரவு அளித்தவர் சுயல்லா பிரேவர்மேன். பிரேவர்மேன் கூறுகையில் “ நான் பிரிட்டனை அதிகமாக நேசிக்கிறேன். அதனால்தான் ஐரோப்பாவிலிருந்து பிரிட்டன் பிரிந்து தனியாக, சுயமாக இருக்க விரும்புகிறேன். பிரெக்ஸிட் முடிவுக்குபின் வரும் சவால்களை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். பிரிட்டன் நிச்சயம் வாய்ப்புகளையும், பாதுகாப்பையும் வழங்கும்” எனத் தெரிவித்தார்

Inhale Vaccine : ஊசியே இல்லாத தடுப்பூசி! சீனா கண்டுபிடிப்பு!!

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுயல்லா பிரேவர்மேன் கணவர் ரேல் பிரேவர்மேன். இருவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. கேபினெட் அமைச்சராகஇருந்தபோதுதான் பிரேவர்மேன் கருவுற்று 2வது குழந்தையைப் பெற்றெடுத்தார். சுயல்லாபிரேவர்மேன் பெளத்த மதத்தை பின்பற்றுபவர். பிரிட்டனில் உள்ள பெளத்த மடத்துக்கு அடிக்கடி சென்றுவருவார், தான் பதவி ஏற்றபோதுகூட தம்மபதம் ஆணையாக என்று உறுதிமொழி ஏற்றார்

PREV
click me!

Recommended Stories

இந்துக்களாக மாறிய 2 லட்சம் இத்தாலியர்கள்..! ஐரோப்பாவின் 2வது பெரிய பூர்வீக இந்து மக்கள் தொகை..! இந்தியாவை நேசிப்பதாக பூரிப்பு..!
அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு.. ஒரு மாணவர் பலி சந்தேக நபர் கைது!