இன்றைய சகாப்தம் போர் நிறைந்ததாக இருக்கக்கூடாது... ஜி 20 மாநாட்டு அறிக்கையில் வலியுறுத்தல்!!

By Narendran SFirst Published Nov 15, 2022, 5:22 PM IST
Highlights

இன்றைய சகாப்தம் போர் நிறைந்ததாக இருக்கக்கூடாது என ஜி20 மாநாட்டு வரைவு அறிக்கையில் உலக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய சகாப்தம் போர் நிறைந்ததாக இருக்கக்கூடாது என ஜி20 மாநாட்டு வரைவு அறிக்கையில் உலக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்த ஜி20 வரைவு அறிக்கையில், சனிக்கிழமையுடன் காலாவதியாகும் ரஷ்யாவுடனான உக்ரேனிய தானிய ஒப்பந்தத்தை நீட்டிக்க G20 அழைப்பு விடுக்கும். இந்த ஆண்டு, உக்ரைனில் நடந்த போர் உலகப் பொருளாதாரத்தை மேலும் மோசமாகப் பாதித்ததை உலக தலைவர்கள் கண்டித்துள்ளனர். மேலும் பெரும்பாலான உறுப்பினர்கள் உக்ரைனில் நடந்த போரை கடுமையாக கண்டித்தனர்.

இதையும் படிங்க: சவாலான நேரங்களில் இந்தோனேசியாவுக்கு இந்தியா பக்கபலமாக நின்றது: பிரதமர் மோடி பெருமிதம்

இது மிகப்பெரிய மனித துன்பத்தை ஏற்படுத்துகிறது மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இருக்கும் பலவீனங்களை அதிகரிக்கிறது. இன்றைய சகாப்தம் போராக இருக்கக்கூடாது. இன்றைய சகாப்தம் போர்க்காலம் அல்ல என்பதை நான் அறிவேன், இதைப் பற்றி நான் உங்களுடன் தொலைபேசியில் பேசினேன் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் மோடி புடினிடம் கூறினார். அதற்கு உக்ரைனில் உள்ள மோதல்களில் உங்கள் நிலைப்பாடு பற்றி எனக்குத் தெரியும், உங்கள் கவலைகள் பற்றி எனக்குத் தெரியும்.

இதையும் படிங்க: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க, பிரான்ஸ் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சு

இவை அனைத்தும் கூடிய விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் புடின் பதிலளித்தார். மோடியின் இந்தக் கருத்து மேற்குலக நாடுகளால் பெரிதும் பாராட்டப்பட்டது. பிரதமர் மோடியுடன் தாம் முழுமையாக உடன்படுவதாகவும், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை பாராட்டுவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய சகாப்தம் "போர் நிறைந்ததாக இருக்கக்கூடாது" என்று உலகத் தலைவர்கள் ஜி 20 மாநாட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும், அணு ஆயுத பயன்பாட்டை கடுமையாக கண்டனம் செய்தனர். pic.twitter.com/Pf1gAoh2tB

— Asianetnews Tamil (@AsianetNewsTM)
click me!