கொரோனா வார்டில் பணியாற்றிய 100 மருத்துவர்கள் பலி..!! பொறுப்பில்லாத இத்தாலியை கழுவி ஊத்தும் டாக்டர்கள்..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 10, 2020, 6:11 PM IST

இந்நிலையில் ரோம் நகரைச் சேர்ந்த ஐஎஸ்எஸ் என்ற பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 10 சதவீதம் பேர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது . 


இத்தாலியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையை சேர்ந்த 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது . கொரோனா வைரஸ் இத்தாலியில் தீவிரமடைந்த நிலையில் ஓய்வுபெற்ற மருத்துவர்களையும் பணிக்கு வருமாறு அரசு அழைத்த நிலையில் அவர்கள் வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாக அச்சங்கம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.  உலக அளவில் இந்த வைரசுக்கு 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  சுமார் 90,000 பேர் வைரசால் உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்கா ,  இத்தாலி ,  பிரான்ஸ் ,  ஸ்பெயின் போன்ற நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . 

Latest Videos

இத்தாலியில் மட்டும் சுமார்  1 லட்சத்து 43 ஆயிரத்து 626 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது ,  இதுவரையில் 18 ஆயிரத்து 679 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர் இந்நிலையில் இத்தாலி நாட்டு மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது , அதாவது,  இத்தாலியில் இதுவரை கொரோனா வைரசுக்கு 100 மருத்துவர்கள்  உயிரிழந்துள்ளதாகவும் ,  அவர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் மருத்துவப் பணியில் ஈடுபட்டதே அதற்கு காரணம் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.   எனவே இனி  தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தங்களின் மருத்துவர்களை கொரோனா வைரஸ் சிகிச்சையில் ஈடுபடுத்த அனுமதிக்கமாட்டோம் என அச் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது . கொரோனா  வைரஸ் நாட்டில் தீவிரமாக பரவிய போது ஓய்வுபெற்ற மருத்துவர்களையும் அரசு உதவிக்காக  அழைத்தது அவர்களும் நாட்டிற்காக சேவையாற்ற வேண்டும் என்று முனைப்புடன் பணிக்கு வந்தனர்,  ஆனால் அவர்களுக்கு தேவையாக பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்கவில்லை , 

இதனால் அவர்கள்  வைரஸ் காய்ச்சலுக்கு ஆளாகி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என அவர்கள் அரசை கடிந்து கொண்டனர்.  இதுவரையில் 30க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வைரசுக்கு உயிரிழந்துள்ளனர்,  இதுவரை மருத்துவர்கள் முதல் மருத்துவ பணியாளர்கள் என 100 முதல் 120 பேர் இந்த வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்திருக்க கூடும் என அந்நாட்டு மருத்துவர்கள் சங்கம் ஆதங்கம் தெரிவித்துள்ளது .  இந்நிலையில் ரோம் நகரைச் சேர்ந்த ஐஎஸ்எஸ் என்ற பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 10 சதவீதம் பேர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது .  அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டி வரும் நிலையில்,  இத்தாலியிலும் இதே புகாரில்  100 மருத்துவர்கள் வரை உயிரிழந்திருப்பது சர்வதேச நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .
 

click me!