வல்லரசு நாடான அமெரிக்காவிற்கு ஏற்பட்ட அவலநிலை... ஒருவேளை உணவிற்காக பல கிலோமீட்டர் காத்திருக்கும் மக்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 10, 2020, 5:33 PM IST
Highlights

கொரோனா உயிரிழப்பை விட உலகமே வல்லரசு நாடாக திரும்பி பார்க்கும் அமெரிக்காவில் தற்போது அரங்கேறிவரும் மற்றொரு அவலம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிற்கு இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 17 ஆயிரத்தை நெருங்கிவருகிறது. 

இதையும் படிங்க: ராதிகா - சரத்குமார் பேத்திக்கு பெயர் வச்சாச்சு... என்ன பெயர் தெரியுமா?

கொரோனா உயிரிழப்பை விட உலகமே வல்லரசு நாடாக திரும்பி பார்க்கும் அமெரிக்காவில் தற்போது அரங்கேறிவரும் மற்றொரு அவலம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்காவில் புயல், சூறாவளி, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவது வழக்கம். 

அப்படி அமெரிக்காவின் ஒமாஹா என்ற நகரில் இயங்கி வரும் உணவு வங்கி முன்பு  உணவை வாங்கிச் செல்வதற்காக பல  கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், ஓட்டல்கள் ஆகியன மூடப்பட்டுள்ளதால், உணவு கிடங்கிற்கு வருவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. வாஷிங்டன் மற்றும் லூசியானா மாகாணங்களில் உணவு பொருட்களை கொண்டு சேர்ப்பது, பகிர்ந்தளிப்பது போன்ற பணிகளுக்கு ராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர். 

A lot of Pennsylvanians need extra help right now. This video is proof enough of that.

Thank you to and all the other helpers across PA distributing food right now. https://t.co/qyPPkAlkD1

— AG Josh Shapiro (@PAAttorneyGen)

இதையும் படிங்க: “இதைவிட குட்டை டவுசர் கிடைக்கலையா?”.... யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்...!

தினமும் 100 பேருக்கு மட்டுமே உணவளிக்க முடியும் என்ற நிலையில், 900 பேர் பல கிலோமீட்டர் தூரத்திற்கு காத்திருந்து உணவை பெற்றுச்செல்கின்றனர். தன்னார்வலர்கள் மற்றும் நிதி அளிப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கு வரும் மக்களுக்கு கோழி நூடுல்ஸ் சூப், பதப்படுத்தப்பட்ட மீன், பீன்ஸ், பன்றி இறைச்சி ஆகியவை டீன்களில் அடைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
 

click me!