மோடிக்கு பாகிஸ்தான் வைத்த செக்...!! முறியடிக்குமா இந்தியா... நாளைதான் தெரியும்...!!

By Asianet TamilFirst Published Sep 12, 2019, 4:56 PM IST
Highlights

காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவம் மனித உரிமை மீறலில்  ஈடுபடுவதைப் போலவும்,  காஷ்மீர் மக்கள் இந்தியாவிடம் இருந்து விடுதலைக் கோருவது போலவும் சித்தரிக்கும் வண்ணம் பாதாகைகளையும் முழக்கங்களையும் பேரணியில் இடம்பெற செய்யவதோடு. 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்  பகுதியில் பொதுமக்களை திரட்டி இந்தியாவுக்கு எதிராக  நாளை பேரணி நடைபெற உள்ளது. ஐநா மனித உரிமை கவுன்சிலில் இந்தியா மீது புகார் தெரிவித்துள்ள நிலையில் பேரணி ஆயுதத்தை கையிலெடுத்துள்ளது பாகிஸ்தான்.

ஜெனிவாவில்,  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இரு தினங்களுக்கு முன்பு 42வது கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது ஷா குரேஷி ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் மட்டும் அல்ல, சர்வதேச சமூகத்தினர் அக்கறை செலுத்த வேண்டிய விவகாரம் என்றார்.  ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் இராணுவ வளையத்தில் இருந்து வருவதுடன், அங்கு குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை வீர ர்களின் எண்ணிக்கை  குறைந்த 7 லட்டத்திலுந்து தற்போது 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார். 

தொடர்ந்து மக்கள் கண்காணிக்கப்பட்டு வருவதால்இராணுவ காஷ்மீர் மக்கள் அடிப்படை உரிமைகள் இழந்து தவித்து வருகின்றனர் என்றார். இந்த நிலையில் பாகிஸ்தானின் குற்றச்சாட்டை  அடியோடு மறுத்துள்ள இந்தியா, காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் அதில் மற்றவர்கள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று மீண்டும் பதிலடி கொடுத்துள்ளது.  

இந்நிலையில் காஷ்மீரில் நடைபெறும்  அடக்குமுறைகள் குறித்து  உலக நாடுகளின்  கவனத்தை ஈர்க்கும் வகையிலும்,  வரும் 13 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகரான  முசாபராபாத்தில் மக்களை திரட்டி மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று டுவிட்டரில் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவம் மனித உரிமை மீறலில்  ஈடுபடுவதைப் போலவும்,  காஷ்மீர் மக்கள் இந்தியாவிடம் இருந்து விடுதலைக் கோருவது போலவும் சித்தரிக்கும் வண்ணம் பாதாகைகளையும் முழக்கங்களையும் பேரணியில் இடம்பெற செய்யவதோடு. சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியா  எதேச்சதிகார நாடு என்பதை போன்ற மாயையை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. 
 

click me!