மலேசியா , பிலிப்பைன்ஸ் , ஆப்கனிஸ்தான் நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே பலநாடுகளுக்கு இந்தியாவில் தடை விதித்துள்ள நிலையில் மேலும் இந் நாட்டினர் இந்தியாவுக்குள் வர தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
மலேசியா , பிலிப்பைன்ஸ் , ஆப்கனிஸ்தான் நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே பலநாடுகளுக்கு இந்தியாவில் தடை விதித்துள்ள நிலையில் மேலும் இந் நாட்டினர் இந்தியாவுக்குள் வர தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது . அதன் தாக்கத்தால் இதுவரை 55 நாடுகளில் சுமார் 7.200 பேர் உயிரிழந்துள்ளனர் . சீனா , இத்தாலி , நாடுகளையடுத்து ஈரான் , பிரான்ஸ் , பிரிட்டன் , ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது .
இதுவரை சர்வதேச அளவில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது . இந்நிலையிங் மாநில அரசுகளும் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது . இந்நிலையில் சர்வதேச நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,900 பேருக்கு கொரோனா நோய்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 தொட்டுள்ளது . கனடா , ஜெர்மனி , சுவிட்சர்லாந்து , நெதர்லாந்து , ஸ்வீடன் , பெல்ஜியம் , உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர் .
இந்நிலையில் மலேசியா , பிலிப்பைன்ஸ் , ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே பல நாடுகளில் இருந்தும் மக்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இந்த மூன்று நாடுகளில் இருந்து பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மற்ற நாடுகளைவிட இந்தியாவிற்கு இம் மூன்று நாடுகளிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்தியரசு தெரிவித்துள்ளது .