7 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி..! அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்..!

By Manikandan S R S  |  First Published Mar 17, 2020, 10:30 AM IST

155க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இதுவரையிலும் 7,157 பேர் பலியாகி இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன. 1,82,438 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அதில், 79 ஆயிரத்து, 212 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 


சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 3,226 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 155 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இதுவரையிலும் 7,157 பேர் பலியாகி இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன. 1,82,438 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அதில், 79 ஆயிரத்து, 212 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

Tap to resize

Latest Videos

சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 368 பேர் பலியாகி இருக்கின்றனர். அந்நாட்டில் இதுவரை 2,158 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,980 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் இருந்து அத்துமீறி வெளியேறினால் 3 மாதம் சிறை தண்டனை அல்லது 18 ஆயிரம் அபராதம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனா, இத்தாலிக்கு அடுத்து ஈரானில் 853 பேரும், ஸ்பெயினில் 342 பேரும் கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர்.

திமுக பொதுச்செயலாளர் தேர்வு நிறுத்திவைப்பு..!

இந்தியாவிலும் கொரானாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 125 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 24 பேரும், உத்தர பிரதேசத்தில் 13 பேரும், கர்நாடகாவில் 8 பேரும், தெலுங்கானாவில் 4 பேரும் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 2 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!