இத்தாலியில் கோர தாண்டவமாடும் கொரோனா..! ஒரே நாளில் 368 பேர் பலி..!

By Manikandan S R SFirst Published Mar 16, 2020, 1:11 PM IST
Highlights

சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 368 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,747 ஆக உயர்ந்துள்ளது.

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 3,213 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இதுவரையிலும் 6500 பேர் பலியாகி இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன.

சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 368 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,747 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் இருந்து அத்துமீறி வெளியேறினால் 3 மாதம் சிறை தண்டனை அல்லது 18 ஆயிரம் அபராதம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

திமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்..? விரைவில் அறிவிப்பு..!

இந்தியாவிலும் கொரானாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது.

என் அழகின் ரகசியம் என்ன தெரியுமா..? கட்சிக் கூட்டத்தில் கலகலத்த குஷ்பு..!

click me!