உலக நாடுகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய தருணம் இது. எச்சரிக்கும் WHO.!!

By T Balamurukan  |  First Published Jun 20, 2020, 10:36 AM IST

 உலக நாடுகள்  மிக, மிக கவனமாக, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.  இந்த தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. அது ஒரு கடினமான பயணம் என்றார்.



உலக நாடுகள்  மிக, மிக கவனமாக, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. அது ஒரு கடினமான பயணம்  என எச்சரிக்கை செய்துள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்.

Tap to resize

Latest Videos

கொரோனா வைரஸ் தொற்றால் ஆபத்தான கட்டத்தில் உலகம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் ஏராளமான உயிர்களை இந்த வைரஸ்க்கு பலிகொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்னும் கொரோனா வைரஸ் கோரதாண்டவம் குறைந்த பாடில்லை. விட்டு விட்டு அடிப்பது போல் கொரோனா வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு நாடுகளில் மாநிலங்களில் கூட திடீரென பாதிப்புகள் உச்ச நிலையை அடைந்து விடுகிறது. என்ன செய்ய போகிறது என்பது யாருக்கும் தெரியாத நிலையில் மருந்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான மருத்துகளை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அடுத்து வரும் ஜீலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் இதன் தாக்கம் உயிரிழப்பு அதிகரிக்குமா? இல்லை குறையுமா? என்பதை பொறுத்திருந்து தான்  பார்க்க முடியும்.

இந்த நிலையில்  அதன் உலக சுகாதாரநிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கூறும் போது... "அமெரிக்கா, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது.நாம் தற்போது புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். கொரோனா அதிவேகமாகவே பரவி வருகிறது. ஆகையால் முக கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது, கை கழுவுதல் ஆகியவை தற்போதும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.கொரோனா தாக்குதல் தொடர்பாக உலக நாடுகள்  மிக, மிக கவனமாக, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.  இந்த தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. அது ஒரு கடினமான பயணம் என்றார்.

click me!