கடுமையாக பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்ற இதுதான் சிறந்த வழி..!! WHO வெளியிட்ட குட் நியுஸ்..!

By Ezhilarasan Babu  |  First Published Sep 3, 2020, 12:27 PM IST

ஸ்டீராய்டு  மருந்துகள் மூலம் சிகிச்சையளிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த மருந்துகளின் சோதனை 1,700 நோயாளிகளிடம் பரிசோதிக்கப்பட்டதில், அது கொரோனா நோயாளிகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது


கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகளின் மூலம் சிகிச்சை அளிப்பதால் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 7 சர்வதேச சோதனைகளை மேற்கொண்டதற்கு பின்னர் அந்த அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான நாடுகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் 2.61 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 86 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1.84 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பெரு உள்ளிட்ட நாடுகள் உலக அளவில் கொரோனாவால்  கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரஸ் தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

அந்நாட்டில் சுமார் 62 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை சுமார் 1.89 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 40 லட்சத்திற்கும் அதிகமானோரும், இந்தியாவில் 38 லட்சத்துக்கும் அதிகமானோரும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 10 லட்சத்தை கடந்துள்ளது. உலகளவில் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தாலும் வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கொத்துக் கொத்தாக  மக்களைத் தாக்கி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பிரத்தியேக தடுப்பூசி கண்டுபிடித்தால் மட்டுமே வைரஸ் தொற்றை தடுக்க முடியும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக அறிவித்துள்ளது. சீனாவும் தடுப்புசிக்கான விலையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தியாவும் தடுப்பூசியை அறிவிப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது, தடுப்பூசி மனிதர்களுக்கு கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. 

இந்நிலையில்  வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு தகவல்களை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில், செறிவூட்டப்பட்ட ஸ்டீராய்டு மருந்துகள் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை வழங்குவதன் மூலம் அது கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிக்கிறது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  ஸ்டீராய்டு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதால் நோயாளிகளை உயிரிழப்பில் இருந்து பாதுகாக்க முடியும் என்றும் ஒட்டுமொத்த ஆபத்தை 20 சதவீதம் அளவிற்கு குறைக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று உள்ள தீவிர நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு  மருந்துகளால் உயிரை காப்பாற்ற முடியும் என்றும், அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அதை பயன்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வெளியிட்டுள்ளது. கார்டிகோ ஸ்டீராய்டு மருந்துகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் இறப்பு அபாயத்தை 20% வரை குறைக்கக்கூடும் என்றும், ஏழு சர்வதேச சோதனைகள் மூலம் இது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.  

கடுமையான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்த முடியும் என்று WHO கூறியுள்ளது. ஆரம்ப அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு  மருந்துகள் மூலம் சிகிச்சையளிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த மருந்துகளின் சோதனை 1,700 நோயாளிகளிடம் பரிசோதிக்கப்பட்டதில், அது கொரோனா நோயாளிகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில், நோயாளியின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அது அதிகரிக்கிறது என்றும், வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கவும் டாக்டர் டெக்ஸாமெதாசோன், ஹைட்ரோகார்ட்டிசோன் மற்றும் மெத்தில்பிரெடிசோலோன் போன்ற ஸ்டீராய்டு மருந்துகள் மருத்துவர்களால் வழங்கப்படுகின்றன. என்றும் WHO தெரிவத்துள்ளது. "தீவிர நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க இந்த மருந்துகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்" என்று WHO இன் மருத்துவ பராமரிப்புத் தலைவர் ஜேனட் டயஸ் கூறியுள்ளார். பிரிட்டன், பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். டயஸின் கூற்றுப்படி, தீவிரமான ஆயிரம் நோயாளிகளுக்கு தாங்கள் கார்டிகோஸ்டீராய்டுகளைக் கொடுத்ததில் , 87 பேரை காப்பாற்ற முடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!