வைரஸ் உருவான வுஹான் நகரில் பள்ளிக்கூடங்கள் திறப்பு: உலக நாடுகளின் வயிற்றெரிச்சல் சீனாக்காரனை சும்மா விடாது.

By Ezhilarasan BabuFirst Published Sep 2, 2020, 4:22 PM IST
Highlights

இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரஸ் தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த நாட்டில் 65 இலட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் ஒட்டுமொத்த உலக நாடுகளும் விழிபிதுங்கி நிற்கும் நிலையில், ஒட்டு  மொத்த உலகத்திற்கும் கொரோனா பரவ காரணமாக இருந்த சீனாவின் வுஹான் நகரத்தில் மீண்டும் பள்ளிக்கூடங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. இது சர்வதேச நாடுகளை ஆச்சர்யம் அடைய வைத்துள்ளது. கடந்த ஆண்டு  இறுதியில் சீனாவின் வூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது . கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 2.59 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 86 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1.81 லட்சம் பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பெரு உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. 

இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரஸ் தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த நாட்டில் 65 இலட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் பிரேசிலில் 39 லட்சம் பேரும், மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 37 லட்சத்துக்கும் அதிகமானோரும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவனின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. இதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. உலக  அளவிலேயே  அதிவேகமாக கொரோனா பரவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பேர் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் இந்தியா வைரஸ் தொற்று பாதித்த நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. 

ஒட்டுமொத்த உலகமும் இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், முதன் முதலில் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட வூஹான் நகரில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது முதல் சீனாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. குறிப்பாக வுஹான் நகரில் உள்ள பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. பின்னர் அந்நாட்டில் கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து ஷாங்காயில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கடந்த மே மாதம் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் முகாமில் மட்டும் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேல்நிலைப் பள்ளிகள் மட்டும் திறக்க மே மாதம் அனுமதி வழங்கப்பட்டது. சிறார்கள் செல்லக்கூடிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு அனுமதி இல்லை. தற்போது வுஹான் நகரிலும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதால் அங்குள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதால், கிட்டதட்ட 14 லட்சம் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கூடம் சென்று வருகின்றனர். 
 

click me!