அய்யோ... இது பேரழிவுக்கு வழிவகுக்கும்..!! தலையில் அடித்துக் கதறும் WHO இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 2, 2020, 12:56 PM IST
Highlights

குழந்தைகள் பள்ளிக்கு திரும்புவதையும், மக்கள் பணியிடங்களுக்கு செல்வதையும் காண நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அது பாதுகாப்பாக செயல்பட வேண்டும், கட்டுப்பாடு இல்லாமல் எளிதில் பரவக்கூடியது இந்த நோய் என்பதால் பெரிய அழிவுக்கு வித்திடும் என்றும் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. செப்டம்பர் மாதத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் சுமார் 200க்கும் அதிகமான நாடுகளில் பாதித்துள்ளது. உலகம்  முழுவதும் 2.59 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 86 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1.81 லட்சம் பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பெரு உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்கா வைரஸ் தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை அந்த நாட்டில் 62 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு  அடுத்த இடத்தில் உள்ள பிரேசிலில் 39 லட்சம் பேரும், மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 37 லட்சத்துக்கும் அதிகமானோரும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. இதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ஒரு நாளில் மட்டும் சுமார் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதே நிலை நீடித்தால் இன்னும் சில தினங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலை பின்னுக்குத் தள்ளி, இந்தியா இரண்டாவது இடத்திற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் 36 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7.88 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தக் கட்டத்தில் மத்திய அரசு நான்கு கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஒரு சிலவற்றிற்கு மட்டுமே கட்டுப்பாடுகளை விதித்து தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல்  டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸை கையாளுவதற்கான கட்டுப்பாடுகளை  விடாமுயற்சியுடன் உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும், கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வராமல் தளர்வுகள் அறிவிப்பது என்பது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார். பலர் கட்டுப்பாடுகளால் சோர்வடைந்து வருவதாகவும், இயல்பு நிலைக்கு திரும்ப விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், குழந்தைகள் பள்ளிக்கு திரும்புவதையும், மக்கள் பணியிடங்களுக்கு செல்வதையும் காண நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அது பாதுகாப்பாக செயல்பட வேண்டும், கட்டுப்பாடு இல்லாமல் எளிதில் பரவக்கூடியது இந்த நோய் என்பதால் பெரிய அழிவுக்கு வித்திடும் என்றும் எச்சரித்துள்ளார்.

 

click me!