நாடு முழுவதும் ஊரடங்கு கடுமையாக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.. விரக்தியின் உச்சத்தில் பிரதமர்..

By Ezhilarasan BabuFirst Published Jan 4, 2021, 1:22 PM IST
Highlights

நாம் கருத்தில் கொள்ளவேண்டிய கடுமையான நடவடிக்கைகள் வெளிப்படையாக உள்ளன. அவை என்னவாக இருக்கும் என்று நான் இப்போது ஊகிக்க  போவதில்லை.  ஏற்கனவே இங்கிலாந்தில் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவதால், ஊரடங்கு கடுமையாக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். வரும் வாரங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், உள்ளிட்ட நாடுகள் கடுமையாக வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்துள்ளன. இதில் பிரிட்டனில் 26 லட்சத்து 54 ஆயிரத்து 679 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 75 ஆயிரத்து 24 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் அந்நாட்டில் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்கனவே வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அதை நாடுமுழுவதும் பரவலாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், எதிர்வரும் வாரங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படலாம்.  அடுத்த சில வாரங்களில் நாம் கடுமையான முடிவுகளை எடுக்க  வேண்டி இருக்கலாம். நான் அதனுடன் முழுமையாக சமரசம் செய்கிறேன். 

நாம் கருத்தில் கொள்ளவேண்டிய கடுமையான நடவடிக்கைகள் வெளிப்படையாக உள்ளன. அவை என்னவாக இருக்கும் என்று நான் இப்போது ஊகிக்க  போவதில்லை.  ஏற்கனவே இங்கிலாந்தில் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது. தற்போது மேலும் அது தீவிரப்படுத்தப்பட உள்ளது. நாடு அதேவேளையில் நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தாலும், பள்ளிகளுக்கு எந்த தடையும் இல்லை, பள்ளிகள் மிகவும் பாதுகாப்பானது என்பதால் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் தயக்கமின்றி பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார். கடந்த சனிக்கிழமையன்று பிரிட்டனில் 57,725 புதிய வைரஸ்கள் பதிவாகியுள்ளது, நான்கு நாட்களில் 420க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மூன்று மாதங்களில் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கும். என அவர் நம்பக்கை தெரிவித்தார். 

 

click me!