சாதனை வீரர் ஜெயசூர்யாவுக்கு நடந்த சோகம்! இப்ப எப்படி இருக்கார் தெரியுமா?

 
Published : Jan 09, 2018, 05:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
சாதனை வீரர் ஜெயசூர்யாவுக்கு நடந்த சோகம்! இப்ப எப்படி இருக்கார் தெரியுமா?

சுருக்கம்

The tragedy of the record player Jayasurya!

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முரளிதரனை எப்படி பிரிக்க முடியாதோ அதே போன்று சனத் ஜெயசூர்யாவையும் பிரிக்க முடியாது. இலங்கை அணிக்காக இவர்கள் பல்வேறு வெற்றிகளை தேடித் தந்துள்ளனர்.

இலங்கை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கி பல்வேறு வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். 22 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் ஆடியவர்கள் ஜெயசூர்யாவும், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. பன்முக ஆட்டக்காரராக வலம் வந்த சனத் ஜெயசூர்யா, பல தருணங்களில் தனியொரு வீரராக இலங்கையின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகும், மீண்டும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், சச்சின் தலைமையிலான அணியில் பங்கேற்ற ஜெயசூர்யா, தனக்கு வயது தான் ஆனதே தவிர, தன்னுடைய அதிரடி இன்றளவும் குறையவில்லை என்று கூறியிருந்தார். இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவராகவும் ஜெயசூர்யா பதவி வகித்து வந்தார்.

கிரிக்கெட்டில் உலகில் பல சாதனைகளைப் படைத்த ஜெயசூர்யா, அரசியலிலும் சேர்ந்து வெற்றி கண்டுள்ளார். இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார். 

இந்த நிலையில், கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், ஜெயசூர்யா நடக்கவே முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். தற்போது ஜெயசூர்யா ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வருகிறார். ஊன்றுகோல் உதவியுடன் ஜெயசூர்யா நடந்து வரும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் வீரர்களுள் ஒருவரான இலங்கை வீரர் ஜெயசூர்யா தற்போது நடக்க சிரமப்பட்டுக் கொண்டு ஊன்றுகோல் உதவியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பார்க்கும் அவரது ரசிகர்கள் அந்த படத்தை வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!