எப்படி இருந்த ஜெயசூர்யா... இப்படி ஆய்ட்டாரே! பேட்டால் பேசிய சனத்தின் பரிதாபக் கதை!

First Published Jan 7, 2018, 6:18 PM IST
Highlights
Sri Lankan Legend Sanath Jayasuriya Unable to Walk Without Crutches


எப்படி இருந்த சனத் இப்படி ஆயிட்டாரே என்று தான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இன்று சனத் ஜெயசூரியாவைப் பார்த்து பரிதாபப் படுகின்றனர். ஒரு காலத்தில் பேட்டால் மட்டுமே பேசிக் கொண்டிருந்தவர் சனத். 1996 உலகக் கோப்பைப் போட்டியைப் பார்த்த எவருக்கும் மறக்கமுடியாத நினைவுகளைத் தந்து கொண்டிருப்பவர் சனத். சுழற்பந்து அப்படி ஒன்றும் பெரிதாக ரசிகர்களின் மனத்தில் பதியவில்லை என்றாலும், அந்த அதிரடி... அந்த அதிரடி பேட்டிங் தான் சனத் ஜெயசூரியாவை சென்ற தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களிடம் இன்றளவும் ஒரு ஹீரோ லெவலில் வைத்துக் கொண்டிருக்கிறது.

இப்படி அதிரடி ஆட்டக்காரராக வலம் வந்த இலங்கை அணி வீரர் சனத் ஜெயசூர்யா, தற்போது நடக்க இயலாமால் ஊன்றுகோல் உதவியுடன் தத்திச் செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது கேட்கவே வருத்தம் தரும் செய்திதான்! 

Latest Videos

1996 உலகப் கோப்பை போட்டிதான் இலங்கை அணிக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது. அந்தத் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் சனத் ஜெயசூர்யா. பின்வரிசையில் வந்து கொண்டிருந்தவர் பின்னர் முதல் வரிசையில் இறங்கத் தொடங்கி, எதிரணியினருக்கு  கிலி பிடிக்கும் அளவுக்கு அடி அடி என்று அடித்து அவர்களை ஆட்டம் காணச் செய்தவர். 

ஒரு நாள் கிரிக்கெட்டில் 48 பந்துகளில் அதிவேக சதம் அடித்த சாதனையாளர்.  இலங்கை அணிக்காக 110 டெஸ்ட், 445 ஒருநாள் போட்டிகள், 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளவர் ஜெயசூர்யா.  டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள், 31 அரைசதங்களுடன் 6,973 ரன்களை குவித்துள்ளார். அதில், இந்திய அணிக்கு எதிராக கொழும்புவில் அவர் அடித்த 340 ரன் அவரது அதிக பட்ச ஸ்கோர்.டெஸ்ட் கிரிக்கெட்டில் 98 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.  ஒரு நாள் போட்டிகளில் 13,430 ரன்கள் எடுத்துள்ளார். 323 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டி20 போட்டிகளில் 629 ரன், 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

 

ஒரு நேரத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆனால் அவர் அப்போது அதிபராக இருந்த ராஜபட்ச குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்தார். இதனால் அவருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழுத் தலைவர் பதவி கிடைத்தது. 

இந்நிலையில், நண்பர் ஒருவர் ஒரு டிவிட் பதிவை போட்டிருந்தார். அதில், சனத் ஜெயசூர்யா நடக்க இயலாத நிலையில் உள்ளார் என்று பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்துடன், கால் மூட்டு பகுதி தேய்ந்து காயம் ஏற்பட்டு, தன்னிச்சையாக நடக்க இயலாமல் ஊன்று  கோல் உதவியுடன் அவர் நடக்கும் படத்தையும் பதிவிட்டிருந்தார்.

இதனால் வெளியிடங்களுக்குச் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளார் என்று பதிவிடப்பட்ட புகைப்படங்கள், இப்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காயத்துக்கு சிகிச்சை பெற அவரை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அழைத்துச் செல்லப் போகிறார்களாம். 

click me!