உடலுறவின்போது தனது பார்ட்னரின் ஆணுறையில் துளையிட்ட காதலி கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து காதலன் நீதிமன்றத்தில் புகார் கூறியதை அடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடலுறவின்போது தனது பார்ட்னரின் ஆணுறையில் துளையிட்ட காதலி கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து காதலன் நீதிமன்றத்தில் புகார் கூறியதை அடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஜெர்மனி நாட்டில் இந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதுகாப்பாக உடலுறவு மேற்கொள்ள பயன்படுத்தப்படுகிறது (காண்டம்) ஆணுறை, இதை பயன்படுத்துவதன் மூலம் ஆண் பெண் இருவருமே நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பாக உடலுறவு மேற்கொள்ள முடிகிறது, அதுமட்டுமின்றி எளிதில் கர்ப்பம் அடைவதை ஆணுறை தடுக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்ள எண்ணம் இல்லாதவர்கள் உடலுறவின் போது இதை பயன்படுத்தலாம் என்பது மருத்துவர்களின் ஆலோசனை ஆக உள்ளது. இந்நிலையில் உடலுறவின்போது பார்ட்னரின் ஆணுறையில் ரகசியமாக பெண் துளையிட்டதால் அந்தப் பெண்ணுக்கு இப்போது சிறை தண்டனை கிடைத்துள்ளது. அதன் முழு விபரம் பின்வருமாறு:-
ஜெர்மனியில் வசிக்கும் 39 வயதுடைய பெண் ஒருவர் 42 வயதுடைய நபருடன் கடந்த சில வருடங்களாக தொடர்பில் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா லாக் டவுன் போது ஆன்லைனில் இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நேரில் சந்தித்து ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். சந்தித்த சில நாட்களிலேயே உடலுறவு வைத்துக்கொண்டனர். இந்நிலையில் அந்தப் பெண் தன் பார்ட்னரை வெறித்தனமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அவருடன் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள அந்தப் பெண் விரும்பினார். அந்த நபரைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என அந்தப் பெண் முடிவு செய்தார். ஆனால் தன் காதலன் தன்னை திருமணம் செய்துகொள்ள மாட்டானோ, திருமணத்திற்கு சம்பதிக்க மாட்டோனோ என அந்தப் பெண்ணுக்கு ஒருவித சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் எப்படியாவது தன் காதலனுடன் குழந்தை பெற்றுக்கொள்ள அந்த பெண் திட்டமிட்டார். இந்நிலையில்தான் இருவரும் உடலுறவு மேற்கொள்வதற்கு முன்பாக அந்தப் பெண் தன் காதலனின் ஆணுறையில் ரகசியமாக ஓட்டை போட்டதாக தெரிகிறது. இதை அறியாமல் காதலன் அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டார். சில நாட்கள் கழித்து அந்த பெண் கர்ப்பமானார்.இது காதலனுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. உடலுறவு கொள்ளும்போது தான்தான் வேண்டுமென்று ஆணுறையில் ஓட்டைக்கு போட்டதாக அந்தப் பெண் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த காதலன், ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டு தகராறு செய்தார். உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினேன், ஆனால் நீ அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டாயோ என்ற சந்தேகம் ஏற்பட்டதால் இப்படி நடந்து கொண்டேன் அந்தப் பெண் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த காதலன், தன் காதலின் மீது நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவரது காதலி மீது விசாரணை நடத்தியது, குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், நம்பிக்கை துரோகம், மோசடி செய்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் காதலனை ஏமாற்றிய வழக்கில் அந்தப் பெண்ணுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாலியல் செயலில் ஈடுபடும் போது துணைக்கு தெரியாமல் ரகசியமாக ஆணுறையை அகற்றுவது அல்லது அதில் துளையிடுவது ஜெர்மனியில் குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி அவராவார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதில் எளிதானது அல்ல என நீதிபதி ஆஸ்ட்ரீட் சாலெவ்ஸ்கி கூறியுள்ளார். இன்று நீதித்துறையில் புதிய வரலாற்றை எழுதியுள்ளோம். இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என நீதிபதி வர்ணித்தார். தற்போது இந்த செய்தியை சமூக வலைத்தளத்தில் பலரும் ஆச்சரியத்துடன் படித்து வருகின்றனர்.